ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

சாப்பிட்டு பணம் கொடுக்காமல் ஹோட்டலை சூறையாடிய திருநங்கைகள் - விழுப்புரத்தில் பரபரப்பு

சாப்பிட்டு பணம் கொடுக்காமல் ஹோட்டலை சூறையாடிய திருநங்கைகள் - விழுப்புரத்தில் பரபரப்பு

உணவகத்தை சூறையாடிய திருநங்கைகள்

உணவகத்தை சூறையாடிய திருநங்கைகள்

கூவாகம் கூத்தாண்டவர் கோவில் திருவிழாவிற்கு வந்த திருநங்கைகள் சிலர், விழுப்புரத்தில் உள்ள ஓர் உணவகத்தில் சாப்பிட்டுவிட்டு பணம் கொடுக்காமல் அந்த உணவகத்தை சூறையாடிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :

  கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை அடுத்த கூவாகம் கூத்தாண்டவர் கோவில் திருவிழா, கடந்த 5ம் தேதி தொடங்கியது.

  இவ்விழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருநங்கைகளுக்கு தாலி கட்டும் நிகழ்ச்சி, நேற்று மாலை நடைபெறுகிறது. இதனையொட்டி, இந்தியா முழுவதும் மட்டுமின்றி வெளிநாடுகளில் இருந்தும் திருநங்கைகள் கூவாசத்திற்கு திரளாகக் வந்தனர்.

  குறிப்பாக, கடந்த சில நாட்களாக விழுப்புரத்தில் உள்ள தனியார் விடுதிகளில் இவர்கள் அதிகளவு தங்கினர். இதையடுத்து, விழுப்புரம் மாவட்ட பெருந்திட்ட வளாகத்துக்கு முன்பாக உள்ள தனியார் உணவகத்தில், திருநங்கைகள் பலர் சாப்பிட சென்றுள்ளனர். இதனைத் தொடர்ந்து, சாப்பிட்டதற்கு பணம் கொடுக்காமல் அனைவரும் வெளியே செல்ல முயற்சித்துள்ளனர்.

  அப்போது, உணவக உரிமையாளர் அவர்களைத் தடுத்து பணம் கேட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த திருநங்கைகள் அனைவரும் ஒன்றாகக் கூடி, நிர்வாணக் கோலத்தில் கும்மியடித்து, உணவகத்தை சூறையாடி கற்களாலும், விறகு கட்டையாலும் அங்கிருந்த பொருட்களை அடித்து, உடைத்து சேதப்படுத்தி உள்ளனர்.

  மேலும், உணவக உரிமையாளர் உட்பட பணியாளர்கள் பலரையும் கும்பலாகக் கூடி  ரகளையில் ஈடுபட்டுள்ளனர். மாவட்ட பெருந்திட்ட வளாகத்துக்கு முன் இச்சம்பவம் நடந்ததால், அங்கு பொதுமக்கள் அதிகளவு கூடியுள்ளனர். இதுகுறித்து தகவலறிந்த விழுப்புரம் தாலுகா காவல் நிலையப் போலீசார் விரைந்து வந்து, விசாரணை நடத்தினர். அப்போது, நாங்க சாப்பிட்டு விட்டு பணம் கொடுக்காமல் வரவில்லை.

  ஓட்டலுக்கு சென்று வெகு நேரமாகியும் எங்களுக்கு சப்ளையர் உணவு கொண்டு வந்து கொடுக்கவில்லை. அதனால் உணவை நாங்களே எடுத்து பரிமாறிக்கொண்டோம். இதனால் உணவை நீங்கள் எப்படி எடுத்துக் பரிமாறிக் கொள்ளலாம் என்று எங்களிடம் உணவக பணியாளர்கள் பிரச்சினையில் ஈடுபட்டனர் என்று அவர்கள் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து இரு தரப்பிலும் சமாதானம் ஏற்பட்டதை தொடர்ந்து வழக்கு பதியாமல் பிரச்சனை முடிவுக்கு வந்தது.

  Must Read : மணமேடையில் இருந்து திடீரென ஓட்டம் பிடித்த மணப்பெண்... வைரலாகும் வீடியோ - கேரளாவில் பரபரப்பு

  இந்த நிலையில், அரசின் பல்வேறு துறைகளில் பல உயர் பதவிகளில் திருநங்கைகள் பலர் மிகச் சிறப்பாக பணியாற்றி வருகின்ற இந்த காலத்தில், சில திருநங்கைகள் சாப்பிட்டதற்குக் கூட பில் கொடுக்காமல் உணவகத்தையே சூறையாடி, ரகளையில் ஈடுபட்ட செயல், கண்ணியத்தோடும் சமூகத்தில் மிகுந்த மரியாதையோடும் வாழ்ந்து வருகின்ற திருநங்கைகளுக்கு பெருத்த அவமானத்தை ஏற்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

  செய்தியாளர் - ஆ.குணாநிதி, விழுப்புரம்.

  Published by:Suresh V
  First published:

  Tags: Hotel, Transgender, Villupuram