• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • வெள்ளரி வியாபாரி காரை மறித்து 30 லட்சம் கொள்ளை.. திண்டிவனத்தில் சிக்கிய கொள்ளையர்கள்

வெள்ளரி வியாபாரி காரை மறித்து 30 லட்சம் கொள்ளை.. திண்டிவனத்தில் சிக்கிய கொள்ளையர்கள்

கொள்ளை சம்பவத்தில் தொடர்புடைய நபர்கள்

கொள்ளை சம்பவத்தில் தொடர்புடைய நபர்கள்

வெள்ளரி வியாபாரியிடம் 30 லட்சம் கொள்ளையடித்த வழக்கில் கொள்ளையர்கள் திண்டிவனத்தில் கைது செய்யப்பட்டனர்.

  • Share this:
    விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே காரை வழிமறித்து 30 லட்சம் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே உள்ள பெருமுக்கல் பகுதியில் செப்டம்பர் 15ஆம் தேதி சேலம் மாவட்டம் ஆத்தூரை சேர்ந்த வெள்ளரி வியாபாரியான ராஜா என்பவரின் காரை வழிமறித்து 30 லட்சம் பணம் கொள்ளையடிக்கப்பட்டது. இது தொடர்பாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீநாதா  சம்பவம் நடந்த இடத்தில் நேரடியாக விசாரனை மேற்கொண்டார். மேலும் தனிப்படைகள் அமைக்கப்பட்டு சுங்கச்சாவடி சிசிடிவி காட்சிகளை கொண்டு விசாரணை நடத்தப்பட்டது.

    Also Read: செல்போன் பேச்சு.. ஆத்திரத்தில் தங்கையை அடித்துக்கொன்ற அண்ணன்

    இதில் கொள்ளையர்கள் சேலத்திலிருந்து காரை பின்தொடர்ந்து வந்தது தெரியவந்தது. இந்த நிலையில் திண்டிவனம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் காவல்துறையினர் வாகன தணிக்கை செய்யும் போது பதிவு எண் இல்லாமல் சந்தேகத்திற்கிடமாக வந்த காரை காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர். அப்போது காரில் வந்த சென்னையை சேர்ந்த சஜித் மற்றும் செங்கல்பட்டு மாவட்டம் ஊரப்பாக்கத்தை சேர்ந்த அசோக், அரவிந்த் ஆகிய மூன்று நபர்கள் காவல்துறையினரை கண்டதும் காரை நிறுத்திவிட்டு தப்பிப்பதற்காக மேம்பாலத்தின் கீழே குதித்துள்ளனர்.

    அப்போது மூன்று பேருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது. மூவரையும் மீட்ட காவல்துறையினர் மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளித்து பின்னர் விசாரணை மேற்கொண்டனர். காவல்துறையினரின் விசாரணையில் மூவரும் கொள்ளை சம்பவத்தில் தொடர்புடையவர்கள் என்பது தெரிய வந்தது. அதனை தொடர்ந்து மூவரையும் கைது செய்த காவல்துறையினர் அவர்களிடமிருந்து 6 லட்சம் ரூபாய் பணம் இரண்டு இருசக்கர வாகனஙகள், ஒரு கார் ஆகியவற்றை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்ட இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    செய்தியாளர்: ஆ.குணாநிதி (விழுப்புரம்)

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Ramprasath H
    First published: