Home /News /tamil-nadu /

விழுப்புரத்தில் கொடூரம்... அரசு பேருந்தில் மாணவிக்கு பாலியல் தொல்லை... ஓட்டுநர், நடத்துனர்!

விழுப்புரத்தில் கொடூரம்... அரசு பேருந்தில் மாணவிக்கு பாலியல் தொல்லை... ஓட்டுநர், நடத்துனர்!

Youtube Video

பேருந்தில் மாணவி தனியாக இருப்பதை கவனித்த பேருந்து ஓட்டுநர் சிலம்பரசன் மாணவியின் அருகில் அமர்ந்து பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.

  • News18
  • Last Updated :
    விழுப்புரம் அருகே அரசு பேருந்தில் இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துனர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    விழுப்புரம் அருகிலுள்ள கோனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் 20 வயதான கல்லூரி மாணவி. இவர் சென்னையில் உள்ள தனியார் கல்லூரியில் கணிதம் மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார். நேற்று மாலை விழுப்புரம் புதிய பேருந்து நிலையம் வந்த கல்லூரி மாணவி சொந்த ஊர் செல்வதற்காக விழுப்புரத்திலிருந்து கொத்தமங்கலம் செல்லும் அரசு பேருந்தில் ஏறியுள்ளார். பேருந்து பெரும்பாக்கம் என்ற இடத்திற்கு சென்ற போது பேருந்தில் இருந்த பயணிகள் அனைவரும் இறங்கிய நிலையில் மாணவி மட்டும் தனியாக பயணம் செய்துள்ளார்.

    இரவு 7. 15 மணி அளவில் பேருந்தில் மாணவி தனியாக இருப்பதை கவனித்த பேருந்து ஓட்டுநர் சிலம்பரசன் மாணவியின் அருகில் அமர்ந்து அவருக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். அப்போது மாணவி தன்னுடைய கணவருக்கு போனில் அழைத்துள்ளார். தொடர்ந்து பேருந்தில் நடக்கும் வாக்குவாதத்தை கணவர் கேட்கும் படி செய்துள்ளார். மேலும் கோனூர் கிராமத்தில் பேருந்தை நிறுத்தாமல் ஓட்டுநர் தொடர்ந்து இயக்கியுள்ளார்.

    இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவி, பேருந்தில் இருந்து குதித்துள்ளார். தகவலறிந்து வந்த கோனூர் கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் பேருந்தை மடக்கிப்பிடித்து ஓட்டுனர் மற்றும் நடத்துனரை, காணை காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

    Also read... விழுப்புரத்தில் தாய், மகள் அடித்துக்கொலை - 24 மணி நேரத்தில் குற்றவாளியை கைது செய்த போலீஸ்

    காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணையில் பெண்ணுக்கு பாலியல் தொல்லை அளித்த உறுதி செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து பேருந்து நடத்துனர் சிலம்பரசன் ஓட்டுநர் அன்புச்செல்வன் இருவர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

    மேலும் பேருந்து நடத்துனர் சிலம்பரசனை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். ஓடும் பேருந்தில் அரசு பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துனர்கள் பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    -செய்தியாளர்: ஆ.குணாநிதி
    Published by:Vinothini Aandisamy
    First published:

    Tags: Crime | குற்றச் செய்திகள், Sexual harassment

    அடுத்த செய்தி