• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • நண்பர்களுடன் கிணற்றில் குளிக்க சென்ற பள்ளி மாணவன் கிணற்றில் தவறி விழுந்து நீரில் மூழ்கி உயிரிழப்பு!

நண்பர்களுடன் கிணற்றில் குளிக்க சென்ற பள்ளி மாணவன் கிணற்றில் தவறி விழுந்து நீரில் மூழ்கி உயிரிழப்பு!

நண்பர்களுடன் கிணற்றில் குளிக்க சென்ற பள்ளி மாணவன் கிணற்றில் தவறி விழுந்து நீரில் மூழ்கி உயிரிழப்பு!

நண்பர்களுடன் கிணற்றில் குளிக்க சென்ற பள்ளி மாணவன் கிணற்றில் தவறி விழுந்து நீரில் மூழ்கி உயிரிழப்பு!

சக நண்பர்களுடன் வீட்டின் அருகே உள்ள பார்த்திபன் என்பவருக்கு சொந்தமான விவசாய கிணற்றில் குளிக்கச் சென்ற போது படியில் கால் வழுக்கி கிணற்று தரையில்  விழுந்துள்ளான்.

  • Share this:
    விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே நண்பர்களுடன் கிணற்றில் குளிக்க சென்ற பள்ளி மாணவன் கிணற்றில் தவறி விழுந்து நீரில் மூழ்கி உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அடுத்த தென்பாலை  கிராமத்தில் வசித்து வரும் சாம்பசிவம் என்பவரின் மகன் சந்தோஷ்(14). அதே ஊரில் உள்ள பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வருகிறார்.

    இந்நிலையில் நேற்று பிற்பகல் சக நண்பர்களுடன் வீட்டின் அருகே உள்ள பார்த்திபன் என்பவருக்கு சொந்தமான விவசாய கிணற்றில் குளிக்கச் சென்ற போது படியில் கால் வழுக்கி கிணற்று தரையில்  விழுந்துள்ளான்.

    Also read: அணில் விழுந்ததில் உயரழுத்த மின்கம்பி அறுந்து பாதிப்பு: பல லட்சம் மதிப்பிலான மின்சாதன பொருட்கள் சேதம்!

    இதில், தலையில் பலத்த காயங்களுடன் நீரில் மூழ்கியுள்ளான், இதனை கண்டு அதிர்ச்சியடைந்த அவனது நண்பர்கள் உடனடியாக அங்கிருந்தவர்கள் உதவியுடன் சந்தோஷை மீட்டுள்ளனர்.

    தொடர்ந்து,  சந்தோஷை 108 ஆம்புலன்ஸ் மூலமாக செஞ்சி அரசு  மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் வழியிலேயே சந்தோஷின் உயிர் பிரிந்து விட்டதாக தெரிவித்தனர்.

    Also read: கிராமப்புறங்களுக்கும் பரவிய டூவீலர் சாகசங்கள்.. சென்னைக்கு புத்தாண்டுனா. இவர்களுக்கு கிராம திருவிழாக்கள்..!

    இந்த சம்பவம் குறித்து சத்தியமங்கலம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நண்பர்களுடன் கிணற்றில் குளிக்கச் சென்ற பள்ளி மாணவன் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    செய்தியாளர் - ஆ.குணாநிதி

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Esakki Raja
    First published: