அம்மன் கோயிலுக்குள் பட்டியலின மக்கள் சென்றால் 2000 அபராதம் - திண்டிவனம் அருகே தீண்டாமை கொடூரம்

Youtube Video

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே பட்டியலின மக்கள் கோயிலுக்குள் செல்ல சிலர் எதிர்ப்பு தெரிவிப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

  • Share this:
    திண்டிவனம் அருகே விழுக்கம் கிராமத்தில் உள்ள செல்லியம்மன் கோயிலில், ஒரு பிரிவைச் சேர்ந்த மக்கள் மற்றும் பட்டியலினத்தவர்கள் வழிபட்டு வந்தனர். இந்த நிலையில், கடந்த 2013ம் ஆண்டு அந்த கோயில் இடிக்கப்பட்டு புதியதாக கட்டுமான பணி தொடங்கியது. இதற்காக பட்டியலினத்தைச் சேர்ந்த மக்கள் ஒரு லட்ச ரூபாயை வழங்கிய போது, அதனை வாங்க கோயில் நிர்வாகம் மறுத்ததாக கூறப்படுகிறது. இந்த சூழலில் கடந்த மாதம் 29ம் தேதி நடைபெற்ற குடமுழுக்கு விழாவில், பட்டியலின மக்களை அப்பகுதியில் வசிக்கும் மற்றொரு பிரிவினர் முழுவதுமாக புறக்கணித்துள்ளனர்.

    அங்கிருந்த பூசாரி உள்பட அனைவரும் கோயிலில் இருந்து வெளியேறியுள்ளனர். பின்னர் பட்டியலினத்தவர்கள் ஒன்று சேர்ந்து அம்மனுக்கு அலங்காரம் செய்து வழிபாடு செய்துவிட்டு திருப்பியுள்ளனர். உடனடியாக கோயிலுக்கு சென்ற ஒரு பிரிவினர் பட்டியலித்தவர்கள் கோயிலுக்குள் நுழைந்ததால் கோயில் தீட்டு ஏற்பட்டதாக கூறி, பட்டியலினத்தவர்களால் அம்மனுக்கு சாத்தபட்ட புடவை, வளையல் உள்ளிட்டவற்றை கோயிலுக்கு வெளியில் உள்ள ஏரிக்கரையில் போட்டு எரித்துள்ளனர் .



    மேலும் பட்டியலினத்தவர் தொட்டு பயன்படுத்திய பூஜை பொருட்ளை கோயிலுக்கு வெளியே தூக்கி வீசியுள்ளனர். மேலும் கோயில் தீட்டு பட்டுவிட்டதாக க்கூறி கோயிலை சுத்தம் செய்த ஒரு பிரிவினர் தீட்டு கழிக்க தனியாக பூஜை நடத்தியுள்ளனர். கோயிலுக்கு சாமி கும்பிட சென்ற அருள்மொழி என்ற பெண் ஒருவரை கோயிலில் இருந்து வெளியேற்றியதோடு, பட்டியலினத்தவர்கள் கோயிலுக்கு வந்தால் இரண்டாயிரம் ரூபாய் அபராதம் என கூறியுள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த பட்டியலின மக்கள், சம்பவம் குறித்து ரோசனை காவல்நிலையத்தில் புகார் அளித்தனர்.

    மேலும் படிக்க...தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு? ஜூன் 14 முதல் தலைமை ஆசிரியர்கள் பணிக்கு வர வேண்டும்: பள்ளிக் கல்வித்துறை அறிவிப்பு

    இதுகுறித்து பட்டியலினத்தவர்கள் கூறுகையில், பல தலைமுறைகளாக கோயிலில் வழிபட்டு வரும் தங்களுக்கு தற்போது கோயில் உள்ளே அனுமதி மறுக்கப்படுவதாகவும். ஒரு சிலர் மட்டுமே பிரச்சனை செய்து எங்களை உள்ளே விடாமல் மறுப்பதாகவும் குற்றம்சாட்டியுள்ளனர். மேலும் செல்லியம்மன் கோயில் வழிபாட்டு உரிமையை மீண்டும் அரசு ஏற்படுத்தி தர வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளனர்.

    செய்தியாளார்: ஆ.குணாநிதி விழுப்புரம்



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Vaijayanthi S
    First published: