நகர்புற உள்ளாட்சி தேர்தலுக்கான நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்ததால்
விழுப்புரம் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள அரசியல் கட்சி சுவர் விளம்பரங்கள், பேனர்களை அதிகாரிகள் அகற்றி வருகின்றனர்.
தமிழகத்தில் நகர்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் நாளை 28 ஆம் தேதி தொடங்கி பிப்ரவரி மாதம் 4ஆம் தேதி வரை நடைபெறுகிறது. பிப்ரவரி 19 ஆம் தேதி வாக்குபதிவு நடைபெறுகிறது. விழுப்புரம் மாவட்டத்தில் 3 நகராட்சி மற்றும் 7 பேரூராட்சிகளுக்கு தேர்தல் நடைபெறுவதால் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளன.
தேர்தலை முன்னிட்டு விழுப்புரம் நகர்புறபகுதிகளான புதியபேருந்துநிலையம், காமராஜர் வீதி, புதுச்சேரி-விழுப்புரம் சாலை ஆகிய பகுதிகளில் வைக்கப்பட்டுள்ள அரசியல் கட்சி பேனர்கள், சாலை தடுப்பு சுவர், பாலத்தின் மீது எழுத்தப்பட்ட சுவர் விளம்பரங்கள், கட்சி கொடிகளை நகராட்சி ஊழியர்கள் இன்று அகற்றியதோடு, சுவர் விளம்பரங்களை சுன்னாம்பு அடித்து அழித்தனர்.
Must Read : பிப்ரவரி 1 முதல் பள்ளிகளை திறக்க தமிழக அரசு முடிவு.. விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு
மேலும் நாளை வேட்பு மனு தாக்கலை முன்னிட்டு நகராட்சி மற்றும் பேரூராட்சி அலுவலகங்களில் அதற்கான ஆயத்த பணிகளில் நடைபெற்று வருகிறது.
செய்தியாளர் : ஆ.குணாநிதி, விழுப்புரம்.இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.