Home /News /tamil-nadu /

மேல்மலையனூர் அங்காள பரமேஸ்வரி ஆலயத்தில் ஊஞ்சல் உற்சவம் - பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம்

மேல்மலையனூர் அங்காள பரமேஸ்வரி ஆலயத்தில் ஊஞ்சல் உற்சவம் - பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம்

மேல்மலையனூர் அங்காள பரமேஸ்வரி

மேல்மலையனூர் அங்காள பரமேஸ்வரி

Malayanur Angala Parameswari Temple : விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் அங்காள பரமேஸ்வரி ஆலயத்தில் 2 ஆண்டுகளுக்கு பிறகு வெகு விமர்சியாக நடைபெற்ற ஊஞ்சல் உற்சவத்தில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம்.

    விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அடுத்த பிரசித்திபெற்ற மேல்மலையனூர் அங்காள பரமேஸ்வரி ஆலயத்தில் பங்குனி மாத அமாவாசை தின ஊஞ்சல் உற்சவம் வெகு விமர்சியாக நடைபெற்றது.

    பங்குனி மாத அமாவாசையையொட்டி இன்று காலையில் மூலவருக்கு பால், சந்தனம், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட பொருட்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு துர்காதேவி அலங்காரத்தில் பக்தர்களுக்கு அங்காளம்மன் காட்சியளித்தார். கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரரோனா பெருந்தொற்று பாதிப்பு காரணமாக அமாவாசை தினத்தில் நடைபெறும் ஊஞ்சல் உற்சவத்தில் பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டு இருந்ததால் கோயில் வளாகத்தில் எளிமையான முறையில் ஊஞ்சல் உற்சவம் நடைப்பெற்ற நிலையில் இந்த பங்குனி மாதம் அமாவாசை ஊஞ்சல் உற்சவத்தில் பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது.

    அதிகாலை முதலே ஆயிரக்கணக்கான பக்தர்கள் மேல்மலையனூர் அங்காள பரமேஸ்வரி ஆலயத்தில் அங்காளம்மனை தரிசிக்க குவிந்தனர். இதனிடையே நள்ளிரவு 12 மணியளவில் நடைபெற்ற ஊஞ்சல் உற்சவத்தில் அலங்கரிக்கப்பட்ட அங்காளம்மனை பூசாரிகள் தாலாட்டு பாடியவாறு ஊஞ்சலில் வைத்து தாலாட்டினர். அப்போது பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தங்கள் வேண்டுதலுக்காக கையில் தேங்காய் சூடம் ஏற்றி அங்காளம்மா தாயே.. அருள் புரிவாயே.. என கோசமிட்டு அம்மனை வணங்கினர்.

    ஊஞ்சல் உற்சவம்


    இந்த பங்குனி மாதம் அமாவாசை ஊஞ்சல் உற்சவம் நிகழ்ச்சிக்காக போக்குவரத்து துறை சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்ட நிலையில் விழுப்புரம் ,கடலூர், வேலூர், சென்னை, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்கள் உட்பட்ட தமிழகம் முழுவதும் மட்டுமல்லாமல் புதுச்சேரி, கர்நாடகம் மற்றும் ஆந்திரா மாநிலங்களில் இருந்தும் மேல்மலையனூர் அங்காளம்மன் பரமேஸ்வரி ஆலயத்திற்கு பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்தனர்.

    Must Read : திருப்பதிக்கு செல்லும் பக்தர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி....

    பக்தர்களின் பாதுகாப்பிற்க்காக விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீநாதா தலைமையில் 200-க்கு மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    செய்தியாளர் - ஆ.குணாநிதி, விழுப்புரம்.
    Published by:Suresh V
    First published:

    Tags: Temple, Villupuram

    அடுத்த செய்தி