Home /News /tamil-nadu /

மிரட்டும் ரவுடி... ஒருவர் கூட வேட்பு மனு தாக்கல் செய்யவில்லை - விக்கிரவாண்டியில் பரபரப்பு

மிரட்டும் ரவுடி... ஒருவர் கூட வேட்பு மனு தாக்கல் செய்யவில்லை - விக்கிரவாண்டியில் பரபரப்பு

Vikravandi

Vikravandi

Vikravandi : விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி ஏழாவது வார்டில் ரவுடியின் மிரட்டல் காரணமாக நேற்று வரை ஒருவர்க்கூட வேட்பு மனு தாக்கல் செய்யவில்லை. இன்று வேட்பு மனு தாக்கல் செய்ய இறுதி நாள் என்பதால் யார் வேட்பு மனு தாக்கல் செய்வார்கள் என்ற எதிர்ப்பார்ப்பு எழுந்துள்ளது.

மேலும் படிக்கவும் ...
    நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வருகின்ற 19ஆம் தேதி நடைபெறவுள்ளது. இன்று (4ஆம் தேதி) வேட்பு மனு தாக்கல் செய்ய இறுதி நாள். இந்நிலையில் விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தேர்வுநிலை பேரூராட்சியில்  15 வார்டு உள்ளது. இந்த 15 வார்டுகளில் 7வது வார்டை தவிர மற்ற வார்டுகளில் திமுக, அதிமுக, சுயேட்சை உள்ளிட்ட வேட்பாளர்கள் ஆர்வமுடன் வேட்பு மனு தாக்கல் செய்து வருகின்றனர்.

    விக்கிரவாண்டி வானியர் தெருவில் வசித்து வரும் ரவுடி கைப்புள்ள (எ) வரதராஜ் (34) என்பவரின் மிரட்டலுக்கு பயந்து தற்போது வரை 7வது வார்டில் மட்டும் ஒருவர் கூட வேட்புமனு தாக்கல் செய்யவில்லை எனக்கூறப்படுகிறது. வரதராஜ் மீது விக்கிரவாண்டி, விழுப்புரம் தாலுகா காவல்நிலையம், வளவனூர், திண்டிவனம் உள்ளிட்ட காவல்நிலையங்களில் கொலை, கொலை முயற்சி, வழிப்பறி என மொத்தம் 19 வழக்குகள் உள்ளது.

    வரதராஜ் மீது கடந்த 2017, 2018 ஆகிய ஆண்டுகளில் இருமுறை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டவர். இந்நிலையில் விக்கிரவாண்டி 7வது வார்டில் வரதராஜ் அவரது மனைவி சிவகாமியை போயிட வைக்க இருப்பதால் வேறு யாரும் போட்டியிடக்கூடாது என்பதால் வரதராஜ் மறைமுகமாக எச்சரிக்கை விடுத்துள்ளதால் திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சி வேட்பாளர்கள்க்கூட வேட்பு மனு தாக்கல் செய்யவில்லை.

    இந்நிலையில் வரதராஜ் தற்போது குடும்பத்துடன் தலைமறைவாக உள்ளார். மேலும், அவரது மனைவி மீது இரண்டு சாரயம் விற்ற வழக்குகள் உள்ளதால் வேட்பு மனு தாக்கல் செய்ய வந்தால் அவரை கைது செய்ய இருப்பதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். மேலும், வரதராஜி மாமியார் உஷா சாரயம் விற்ற வழக்கில் கைது செய்யப்பட்டு தற்போது சிறையில் உள்ளார்.

    Must Read : சுயேச்சை வேட்பாளராக சென்னையில் களமிறங்கிய கானா பாலா

    வேட்பு மனு தாக்கல் செய்ய இன்று இறுதி நாள் என்பதால் 7வது வார்டில் யார் வேட்பு மனு தாக்கல் செய்யப்போகிறார்கள் என்ற எதிர்ப்பார்ப்பு எழுந்துள்ளது. ரவுடியின் மிரட்டல் காரணமாக ஏழாவது வார்டில் ஒருவர் கூட வேட்பு மனு தாக்கல் செய்யாமல் இருப்பது விக்கிரவாண்டி பகுதி மக்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் மாவட்ட காவல்துறை கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    செய்தியாளர் : ஆ.குணாநிதி, விழுப்புரம்.
    Published by:Suresh V
    First published:

    Tags: Local Body Election 2022, Villupuram

    அடுத்த செய்தி