விழுப்புரம் நகராட்சி தேர்தலில் வேட்பு மனு தாக்கல் செய்யவந்த நாம் தமிழர் வேட்பாளர்கள் வாக்கு விற்பனைக்கு அல்ல என்பதை உணர்த்தும் விதமாக நாம் ஒரு விரலில் பணத்தை சுருட்டி வந்து மனு தாக்கல் செய்தனர்.
நகர்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் செய்ய இன்று கடைசி நாள் என்பதால் விழுப்புரம் நகராட்சியில் உள்ள 42 வார்டுகளுக்கான வேட்பு மனு தாக்கல் செய்ய திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சி வேட்பாளர்கள் ஆர்வத்துடன் வருகை புரிந்து மனு தாக்கல் செய்தனர். இதே போன்று விழுப்புரம் நகராட்சி தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பில் 14 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.
நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடுகின்ற 4 வேட்பாளர்கள் இன்று வாக்கு விற்பனை அல்ல என்பதை வலியுறுத்தியும், ஒரு விரலால் வாக்களிப்பது மாற்றத்தை ஏற்படுத்தும் என்பதால் பணத்திற்காக விற்பனை செய்யக்கூடாது என்பதை உணர்த்தும் விதமாக நாம் தமிழர் வேட்பாளர்கள் வாக்களிக்கும் விரலில் 500, 100 ரூபாய் பணத்தை சுருட்டு கொண்டு வந்து வேட்பு மனு தாக்கல் செய்தனர்.
Also Read : சுயேச்சை வேட்பாளராக சென்னையில் களமிறங்கிய கானா பாலா
வேட்பு மனு தாக்கல் செய்ய வந்த இடத்தையே பிரச்சார கலமாக மாற்றி நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் கொள்ளைகளை முழங்க தொடங்கினர். தேர்தலில் ஜனநாயகம் காக்கப்படவில்லை, பண நாயகம் தான் நடக்கிறது என்றும் நீதி தேவதையின் கண்கள் கட்டப்பட்டுள்ளது, புரட்சி செய்யக்கூடிய ஒருவிரல் பணத்தால் கட்டப்பட்டுள்ளது, மக்கள் வரிப்பணம் மக்களுக்கே, தூய மக்கள் ஆட்சி மக்களுக்கே என தேர்தல் பரப்புரை செய்ய தொடங்கினர்.
செய்தியார் : குணாநிதி, விழுப்புரம்
Local Body Election Updates | உள்ளாட்சி தேர்தல் குறித்த செய்திகள் உடனுக்குடன் தெரிந்து
இங்கே க்ளிக் செய்யவும்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.