ஒட்டனந்தல் சம்பவம்; பாதிக்கப்பட்ட முதியவர்களுக்கு ரூ.25 ஆயிரம் நிதியுதிவி வழங்கிய அமைச்சர்கள்!!

பாதிக்கப்பட்ட முதியவர்களுக்கு ரூ.25 ஆயிரம் நிதியுதவி

இது தொடர்பாக திருவெண்ணைநல்லூர் காவல்துறையினர் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 • Share this:
  விழுப்புரம் மாவட்டம் திருவெண்னைநல்லூர் அருகே ஒட்டனந்தல் கிராமத்தில் பட்டியலின முதியவர்கள் காலில் விழவைக்கப்பட்ட சம்பவத்தில் பாதிக்கப்பட்ட முதியவர்களுக்கு தமிழக அரசு சார்பில் தலா ரூ.25ஆயிரம் நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது.

  விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூர் அருகிலுள்ள ஒட்டனந்தல் கிராமத்தில் பட்டியலின சமூகத்தைச் சேர்ந்த முதியவர்கள் மூன்று பேர் ஊர் பஞ்சாயத்தில் காலில் விழ வைக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது தொடர்பாக திருவெண்ணைநல்லூர் காவல்துறையினர் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

  Must read :  திருவிழா நடத்தியதற்காக பட்டியல் சமூகத்தைச் சேர்ந்தவர்களை காலில் விழுந்து மன்னிப்பு கேட்க வைக்கப்பட்ட அதிர்ச்சி சம்பவம்

  இந்நிலையில் இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட மூன்று முதியோர்களுக்கும் விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவகத்தில் ஆதிதிராவிடர் நலத்துறை சார்பாக 25ஆயிரம் ரூபாய் நிதி உதவி அளிக்கப்பட்டது. இந்த நிதியை உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் மஸ்தான் ஆகியோர் பாதிக்கப்பட்ட முதியோர்களுக்கு வழங்கினர்.

  அதனைத் தொடர்ந்து  நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்டத்தில் உள்ள வனிகர்கள், சமூக ஆர்வளர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் தமிழக அரசின் கொரோமா பேரிடர் நிவாரன நிதிக்கு நிதியுதவி அளித்தனர். இதனை உயர்க்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி பெற்றுக்கொண்டார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் அண்ணாதுரை உள்ளிட்ட உயர் அதிகாரிகள் கலந்துக்கொண்டனர்.

  செய்தியாளர் - குணாநிதி  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Esakki Raja
  First published: