Home /News /tamil-nadu /

வாக்கு சேகரிப்பது எப்படி? - வேட்பாளர்களுக்கு வகுப்பெடுத்த அமைச்சர் க.பொன்முடி

வாக்கு சேகரிப்பது எப்படி? - வேட்பாளர்களுக்கு வகுப்பெடுத்த அமைச்சர் க.பொன்முடி

க.பொன்முடி

க.பொன்முடி

Viluppuram : விழுப்புரத்தில் திமுக வேட்பாளர்கள் அறிமுக கூட்டத்தில் பேசிய அமைச்சர் க.பொன்முடி எப்படி வாக்கு சேகரிக்க வேண்டும் என வேட்பாளர்களுக்கு விளக்கினார்.

    தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்குப் பதிவு வருகின்ற 19 ஆம் தேதி நடைபெறுகிறது. இந்நிலையில் விழுப்புரம் நகராட்சிக்கு திமுக சார்பில் போட்டியிட கூடிய 42 வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்ட நிலையில், திமுக 33  இடங்களில் நேரடியாக வேட்பாளர்களை நிறுத்தியுள்ளது. பத்து இடங்களில் கூட்டனி கட்சியினர் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடவுள்ளனர்.

    விழுப்புரத்தில் உள்ள கலைஞர் அறிவாலயத்தில், வேட்பாளர்களை அறிமுகப்படுத்தி உயர்கல்வி துறை அமைச்சர் பொன்முடி உரையாற்றினார். கூட்டத்தில் பேசிய பொன்முடி, பெண்களுக்கு இட ஒதுக்கீடு  கொடுத்தது திமுக அரசு. அரசு பள்ளிகளில் படித்த மாணவர்கள் 7.5 சதவீத இட ஒதுக்கீடில் மருத்துவ இடங்களில் சேர்ந்துள்ளனர். தமிழகத்திலேயே அதிக இடங்களை பெற்று வெற்றி பெற்ற நகராட்சியாக விழுப்புரம் நகராட்சி இருக்க வேண்டும்.

    வேட்பாளர்கள் பொது மக்களின் கோரிக்கையை குறித்து வைத்துக்கொள்ள வேண்டும் எனகூறி அமைச்சர் பொன்முடி, நாங்கள் அதனை கண்டிப்பாக நிறைவேற்றி தருவோம் என வேட்பாளர்களுக்கு வாக்குறுதி அளித்தார். வேட்பாளர்கள் வீடு வீடாக சென்று வணக்கம் போடுவதை விடுத்து, வீட்டில் அமர்ந்து அவர்களின் குறைகளை கேட்க வேண்டும். மேலும், அவர்களின் காலில் விழுந்து வாக்கு சேகரிக்கவும் தயங்கக் கூடாது என கூறினார்.

    பெண் வேட்பார்கள் கனவர் பார்த்துக்கொள்வார் என இல்லாமல் நீங்களும் வாக்கு சேகரிக்க வேண்டும் என அறிவுறுத்தினார். கூட்டணி கட்சியினரோடு இணக்கமாக செயல்பட்டு மிகப்பெரிய வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டும்.

    Must Read : அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளுடன் கேரள முதல்வருக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்..

    எதிர்த்து போட்டியிட்டவர்கள் டெபாசிட் இழக்க செய்ய வேண்டும் என கேட்டுக்கொண்டார். மக்களுக்கு மறதி அதிகம் அதனால் திமுக அரசின் சாதனையை வீடு வீடாக சென்று எடுத்து சொல்ல வேண்டும் எனவும் கூறினார்.

    செய்தியாளர் : ஆ.குணாநிதி, விழுப்புரம்.        
    Published by:Suresh V
    First published:

    Tags: DMK, Local Body Election 2022, Ponmudi

    அடுத்த செய்தி