Home /News /tamil-nadu /

வெற்றி சான்றிதழுக்காக நீண்ட விரிசையில் காத்திருந்த உறுப்பினர்கள்

வெற்றி சான்றிதழுக்காக நீண்ட விரிசையில் காத்திருந்த உறுப்பினர்கள்

நீண்ட விரிசையில் காத்திருக்கும் உறுப்பினர்கள்

நீண்ட விரிசையில் காத்திருக்கும் உறுப்பினர்கள்

விழுப்புரத்தில் வெற்றி பெற்ற உறுப்பினர்கள் வெற்றி சான்றிதழுக்காக நீண்ட விரிசையில் அமர்ந்து காத்திருந்தனர்.

    விழுப்புரம் மாவட்டம் கோலியனூர் ஊராட்சி ஒன்றிய தேர்தல் அலுவலர் அலுவலகம் முன்பு, ஊரக உள்ளாட்சி தேர்தலில், ஊராட்சி வார்டில் வெற்றிபெற்றவர்கள் தங்களுக்குரிய வெற்றி சான்றிதழுக்காக நீண்ட விரிசையில் அமர்ந்து காத்திருந்தனர்.

    விழுப்புரம் மாவட்டத்தில் 13 வாக்கு எண்ணும் மையங்களில் உள்ளாட்சி தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. அதன்படி, 13 ஒன்றியங்களில் இரண்டு கட்டமாக நடைபெற்ற வாக்குகள், 13 மையங்களில் எண்ணப்பட்டு வருகின்றன. இந்நிலையில், வாக்கு எண்ணும் மையங்களில் அசம்பாவிதங்கள் ஏற்படாமல் இருக்க, துப்பாக்கி ஏந்திய போலீசார், கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கபட்டு வருகிறது.

    வாக்குப் பெட்டிகள் வாக்கு எண்ணும் மையத்தில் வைக்கப்பட்டிருந்த ஸ்டாங் ரூமிலிருந்து கட்சி வேட்பாளர், முகவர்கள் முன்னிலையில் திறக்கப்பட்டு வாக்கு எண்ணும் பணி தொடங்கி நடைபெற்றது. முதலாவதாக, தபால் வாக்குகள் எண்ணப்பட்டன. உள்ளாட்சி மன்ற தேர்தல் விழுப்புரம் மாவட்டத்தில் மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் (கவுன்சிலர்) 28 பதவிகளுக்கு, ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினர் 293 பதவிகளுக்கு, ஊராட்சி மன்ற தலைவர் 688 பதவிகளுக்கு, வார்டு உறுப்பினர் 5088 பதவிகளுக்கு, என 6097 பதவிகளுக்கான வேட்பாளர்கள் உள்ளிட்ட பொதுமக்கள் ஆவலுடன் முடிவை எதிர்பார்த்தனர்.

    இதில், 379 நபர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டதால் 5,715 பதவிகளுக்கு இரண்டு கட்டமாக நடைபெற்ற தேர்தலில் 19,982 வேட்பாளர்கள் களத்தில் போட்டியிட்டனர். இரண்டு கட்டமாக நடைபெற்ற தேர்தலில் 13,86,007 தகுதியான வாக்காளர்கள் இருந்த நிலையில் 5,76,949 ஆண் வாக்களர்களும் 5,81,887 பெண் வாக்காளர்களும், மாற்று பாலினத்தவர்கள் 36 நபர்கள் என 11,69,929 வாக்காளர்கள் தங்களது வாக்கினை பதிவு செய்தனர். இரண்டு கட்டமாக 2,948 வாக்கு சாவடி மையங்களில் நடைபெற்ற தேர்தலில் விழுப்புரம் மாவட்டத்தில் 84.41 சதவிகித வாக்குகள் பாதிவாகின.

    Must Read : பாஜகவை சேர்ந்தவருக்கு ஒரே ஒரு ஓட்டு ; தேமுதிகவை சேர்ந்தவருக்க 2 ஓட்டு!

    இந்நிலையில், பலத்த பாதுகாப்புடன் வாக்கு எண்ணப்பட்டு, வெற்றி பெற்ற வார்டு உறுப்பினர்கள் அறிவிக்கப்பட்டனர். இந்நிலையில், வார்டில் வெற்றிபெற்றவர்கள் தங்களுக்குரிய வெற்றி சான்றிதழுக்காக நீண்ட விரிசையில் அமர்ந்து காத்திருந்தனர்.
    Published by:Suresh V
    First published:

    Tags: Local Body Election 2021

    அடுத்த செய்தி