• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • பெட்ரோல் விலை 35 ரூபாயாக குறைக்க நடவடிக்கை - பாஜக தலைவர் அண்ணாமலை தகவல்

பெட்ரோல் விலை 35 ரூபாயாக குறைக்க நடவடிக்கை - பாஜக தலைவர் அண்ணாமலை தகவல்

பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை

பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை

அண்ணாமலை உரையாற்றிக்கொண்டிருக்கும் போதே கூட்டத்தில் இருந்த பொது மக்களில் ஒருவர் பெட்ரோல் விலையை எப்போது குறைப்பீர்கள் என கேள்வி எழுப்பினார். 

  • Share this:
    பெட்ரோல் விலை 35ரூபாய் குறைக்க மத்திய அரசு தயாராக இருப்பதாக ஊரக உள்ளாட்சி தேர்தல் பிரச்சார கூட்டத்தில் பொது மக்களின் கேள்விக்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பதில் அளித்தார். மேலும் பொது மக்களின் கேள்வியால் கூட்டத்தை பாதியிலேயே  அண்ணாமலை முடித்துக்கொண்டு கிளம்பினார்.

    விழுப்புரம் உள்ளிட்ட ஒன்பது மாவட்டங்களில் வருகின்ற 6மற்றும் 9ஆகிய தேதிகளில் இரு கட்டங்களாக உள்ளட்சித் தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்காக அரசியல் கட்சி தலைவர்கள் தொடர் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். விழுப்புரம் மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி  தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து விழுப்புரம் அருகிலுள்ள அன்னியூர் பகுதியில் பிரச்சாரம் பொதுக்கூட்டம் நடைபெற்றது.

    இந்த கூட்டத்தில் மாநில பிஜெபி தலைவர் அண்ணாமலை கலந்துக்கொண்டு உரையாற்றினார். அண்ணாமலை உரையாற்றிக்கொண்டிருக்கும் போதே கூட்டத்தில் இருந்த பொது மக்களில் ஒருவர் பெட்ரோல் விலையை எப்போது குறைப்பீர்கள் என கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளிக்கும் விதமாக பேசிய அண்ணாமலை: பாஜக கட்சி பெட்ரோல் விலையை 35 ரூபாய் குறைக்கும். பெட்ரோல், டீசலை ஜிஎஸ்டி-க்குள் கொண்டு வந்து விலையை குறைப்போம்.

    தமிழக நிதி அமைச்சர் ஜிஎஸ்டி கூட்டத்தில் கலந்துகொள்ளாமல் வளைகாப்புக்கு சென்றுவிட்டார். இது தான் திமுகவின் அவலமான நிலை. பெட்ரோல், டீசல் விலையை குறைக்க பிஜெபி அரசு தயாராக உள்ளது. பெட்ரோல், டீசலை ஏன் ஜிஎஸ்டி-க்குள் கொண்டுவரக்கூடாது என நிதியமைச்சர் சொல்கிறார் என புரியவில்லை. இதனை தமிழக அரசு விளக்க வேண்டும். சத்தியம் செய்கிறேன் பாஜக பெட்ரோல் விலையை குறைப்பதற்காக தொடர்ந்து போராடுவோம்.

    Also Read:   பாஜக மதவாத கட்சி என திமுக, கூட்டணி கட்சிகள் பொய் பிரச்சாரம் – பாஜக பிரமுகர் சையத் இப்ராஹீம்

    மாநில அரசு வரியை குறைக்க வேண்டும். திமுகவுக்கு ஆண்டவன் நல்ல புத்தியை கொடுத்து பெட்ரோல், டீசலை ஜிஎஸ்டிக்குள் கொண்டு வர முன்வரவேண்டும். என பேசினார்.

    தொடர்ந்து பொது மக்கள் கேள்விகளை எழுப்பியவாரு இருந்ததால் கூட்டத்தை பாதியிலேயே முடித்துக்கொண்டு அண்ணாமலை கிளம்பினார். கேள்வி கேட்ட நபரை பாஜகவினர் அமைதிப்படுத்த முயற்சித்தனர் இருப்பினர் அவர் கேள்வி கேட்டவாறே இருந்ததால் காவல்துறையினர் அவரை அப்புறப்படுத்தினர், இதனால் கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது.

    ஆ.குணாநிதி, செய்தியாளர் -  விழுப்புரம்     

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Arun
    First published: