Home /News /tamil-nadu /

இருளர் இன மாணவருக்கு நேர்ந்த கொடுமை.. மாற்று சமுதாய மாணவர்கள் சாதி பெயரை கூறி தீயில் தள்ளிவிட்டதாக புகார்

இருளர் இன மாணவருக்கு நேர்ந்த கொடுமை.. மாற்று சமுதாய மாணவர்கள் சாதி பெயரை கூறி தீயில் தள்ளிவிட்டதாக புகார்

இருளர் இன மாணவருக்கு நேர்ந்த கொடுமை

இருளர் இன மாணவருக்கு நேர்ந்த கொடுமை

Irular Student | விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே இருளர் மாணவனை சாதிப்பெயர் கூறி அழைத்து தீயில் தள்ளிவிட்ட மாற்று சமுதாய மாணவர்கள் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது.

விழுப்புரம் மாவட்டம் வெள்ளிமேடுபேட்டை அருகிலுள்ள காட்டுச்சிவிரி கிராமத்தை சேர்ந்தவர் கன்னியப்பன். இவருடைய மகன் சுந்தர்ராஜ் (11) அதே ஊரில் உள்ள உயர்நிலைப்பள்ளியில் 6ஆம் வகுப்பு படித்து வருறார். இந்நிலையில் நேற்று மாலை 4.30 மணியளவில் மாணவர  சுந்தர்ராஜ் தன்னுடைய வீட்டில் இருந்து அருகிலுள்ள பாட்டி வீடிற்கு நடந்து சென்றுள்ளார். அப்போது அங்குள்ள கருமாதி கொட்டை அருகே நின்றிருந்த அதே ஊரை சேர்ந்த மற்றொரு சமூகத்தை சேர்ந்த பாலமுருகன், திவாகர், கிஷோர் ஆகிய மூன்று பேர் சுந்தர்ராஜை சாதி பெயரை கூறி அழைத்துள்ளனர், அருகில் சென்ற சுந்தர்ராஜை திடீர் என அருகில் எரிந்துக்கொண்டிருந்த தீயில் தள்ளியியுள்ளனர்,

இதில் சுந்தர்ராஜின் சட்டை தீப்பற்றி எரிய தொடங்கியுள்ளது. இதையடுதது அருகிலுள்ள தண்ணீர் தொட்டில் உடலை நனைத்துள்ளார் சுந்தர்ராஜ். இதனால் மார்பு, முதுகு ஆகிய பகுதிகளில் பலத்த தீ காயம் ஏற்பட்டுள்ளது. அப்போது சுந்தர்ராஜ் தாய் அஞ்சலை தீ காயம் குறித்து கேட்டபோது, சுந்தர்ராஜ் தீயில் தவறி விழுந்துவிட்டதாக கூறியுள்ளனர். பின்னர் சுந்தர்ராஜை மனம்பூண்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்து சென்று முதலுதவி அளித்து பின்னர் மேல் சிக்கிச்சைக்காக திண்டிவனம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Also Read : மிரட்டும் அசானி புயல்.. தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு மழை பெய்யும் - வானிலை ஆய்வு மையம்

இதனை அறிந்த சுந்தர்ராஜ் தந்தை கன்னியப்பன் சுந்தர்ராஜியிடம் விசாரித்துள்ளார், அப்போது மாணவர்கள் மூவரும் சேர்ந்து தீயில் தள்ளியதை கூறியுள்ளார். அதனை தொடர்ந்து மாணாவர்கள் பாலமுருகன்(13), திவாகர்(12), கிஷோர்(11) ஆகியோர் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கன்னியப்பன் வெள்ளிமேடுபேட்டை காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

இது குறித்து பாதிக்கப்பட்ட மாணவன் சுந்தர்ராஜ் கூறுகையில், நான் நடந்து சென்றுகொண்டிருந்த போது பாலமுருகன், திவாகர், கிஷோர் ஆகிய மூவரும் தன்னை சாதி பெயர்க்கூறி அழைத்ததாகவும், அருகில் சென்றவுடன் தீயில் தள்ளிவிட்டதாகவும் தெரிவித்தார்.  மேலும் பள்ளிக்கூடத்தில் தன்னை சாதி பெயரை கூறி அழைப்பதாகவும், அடிப்பதாகவும் கூறியுள்ளார்.

இருளர் சமூகத்தை சேர்ந்த மாணவன் சுந்தர்ராஜை மற்றொரு சமூகத்தை சேர்ந்த மூன்று பள்ளி மாணவர்கள் சாதிப்பெயரைகூறி அழைத்ததோடு மட்டுமில்லாமல் தீயில் தள்ளியுள்ளனர். இதில் பலத்த காயமடைந்த மாணவன் தற்போது சிகிச்சை பெற்று வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாதிக்கபப்ட்ட மாணவனின் வாக்குமூலத்தின் மூலம் பள்ளியிலும் மாணவன் சாதி ரீதியாக பாதிக்கப்பட்டுள்ளது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. மாணவர்கள் மத்தியில் சாதி உணர்வு மேலோங்கி வருவது கலையளிப்பதாக உள்ளன சமூக ஆர்வளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

செய்தியாளர் : குணாநிதி, விழுப்புரம்
Published by:Vijay R
First published:

Tags: Crime News, Villupuram

அடுத்த செய்தி