Home /News /tamil-nadu /

பாலியல் தொல்லை வழக்கு: பெண் எஸ்.பியிடம் முன்னாள் சிறப்பு டிஜிபியின் தரப்பு வழக்கறிஞர் குறுக்கு விசாரணை

பாலியல் தொல்லை வழக்கு: பெண் எஸ்.பியிடம் முன்னாள் சிறப்பு டிஜிபியின் தரப்பு வழக்கறிஞர் குறுக்கு விசாரணை

பாலியல் தொல்லை வழக்கு

பாலியல் தொல்லை வழக்கு

தமிழக காவல்துறையில் சிறப்பு டிஜிபியாக பணியாற்றி வந்த ராஜேஷ்தாஸ் தனக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக கடந்த மார்ச் மாதம் பெண் எஸ்.பி ஒருவர் புகார் அளித்திருந்தார்.

  • News18
  • Last Updated :
    பாலியல் தொல்லை வழக்கில் விழுப்புரம் நீதிமன்றத்தில் ஆஜரான பெண் எஸ்.பியிடம், முன்னாள் சிறப்பு டிஜிபியின் தரப்பு வழக்கறிஞர் குறுக்கு விசாரணை நடத்தினார்.   

    தமிழக காவல்துறையில் சிறப்பு டிஜிபியாக பணியாற்றிய ராஜேஷ் தாஸ் தனக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக கடந்த மார்ச் மாதம் பெண் எஸ்.பி ஒருவர் புகார் அளித்திருந்தார். இச்சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இதனையடுத்து காவல்துறை சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் மற்றும் அவருக்கு உதவிய செங்கல்பட்டு எஸ்.பி  கண்ணன் ஆகிய இருவரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டதோடு, பாலியல் புகார் குறித்து சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டது.

    இதனைத்தொடர்ந்து விழுப்புரம் சிபிசிஐடி போலீசார், முன்னாள் டிஜிபி ராஜேஷ்தாஸ் மற்றும் அவருக்கு உதவிய செங்கல்பட்டு முன்னாள் எஸ்.பி கண்ணன் ஆகியோர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

    இந்நிலையில் விழுப்புரத்தில் உள்ள மாவட்ட தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் இன்று வழக்கு விசாரணைக்கு வந்த போது பாதிக்கப்பட்ட பெண் எஸ்.பி மற்றும் குற்றச்சாட்டுக்குள்ளான முன்னாள் செங்கல்பட்டு எஸ்.பி கண்ணன் ஆகியோர் நேரில் ஆஜராகினர். முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ்தாஸ் ஆஜராகவில்லை.

    Also read... ஜெயக்குமாரின் மகள், மருமகன் முன் ஜாமீன் கோரி மனு - காவல்துறை பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு

    இதனைத்தொடர்ந்து பாதிக்கப்பட்ட பெண் எஸ்.பியிடம் முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ்தாஸ் தரப்பு வழக்கறிஞர்கள் 8வது முறையாக இன்று குறுக்கு விசாரணையை தொடங்கினர். அப்போது நீதிமன்ற அறைக் கதவுகள் மூடப்பட்டு பாதிக்கப்பட்ட பெண் எஸ்.பியிடம் நடத்தப்பட்டு வரும் குறுக்கு விசாரணையை நீதிபதி கோபிநாதன் பதிவு செய்தார்.

    செய்தியாளர்: குணாநிதி
    Published by:Vinothini Aandisamy
    First published:

    Tags: Sexual harrasment

    அடுத்த செய்தி