Home /News /tamil-nadu /

படகு கவிழ்ந்து மீனவர் உயிரிழப்பு - கிழக்கு கடற்கரை சாலையில் மீனவர்கள் மறியல்!

படகு கவிழ்ந்து மீனவர் உயிரிழப்பு - கிழக்கு கடற்கரை சாலையில் மீனவர்கள் மறியல்!

கிழக்கு கடற்கரை சாலையில் மீனவர்கள் மறியல்

கிழக்கு கடற்கரை சாலையில் மீனவர்கள் மறியல்

சின்ன முதலியார் சாவடி தூண்டில் முள்வளைவு அமைக்காததால் அடிக்கடி படகு கவிழ்ந்து விபத்து ஏற்படுகிறது. வாரத்திற்கு ஐந்து மீனவர்கள் காயமடைகிறது. உயிரிழப்பும் ஏற்படுகிறது.

  • News18
  • Last Updated :
துண்டில் முள்வளைவு அமைக்காததால் தான் படகு கவிழ்ந்து மீனவர் உயிரிழந்ததாக கூறி  கிழக்கு கடற்கரை சாலையில் மீனவர்கள் மறியல் போராட்டத்தில்  ஈடுபட்டனர்.

புதுச்சேரியை அடுத்துள்ள விழுப்புரம் மாவட்டத்தின் சின்னமுதலியார்சாவடி மீனவ கிராமத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் வசித்து வருகிறார்கள். இவர்களில் 200-க்கும் மேற்பட்ட படகுகளில் மீனவர்கள் மீன்பிடித்து வருகிறார்கள்.

இந்த கிராமத்தின் இருபக்கமும் உள்ள தந்திராயன்குப்பம், பொம்மையார்பாளையம் கிராமங்களில் தூண்டில் வளைவு அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் சின்ன முதலியார் சாவடி தூண்டில் முன்வரைவு அமைக்கப்படவில்லை. இதனால் பாதுகாப்பு இல்லாத நிலையில் மீனவர்கள் மீன்பிடித்து வருகிறார்கள்.

இந்த நிலையில் இன்று காலை 4 மணிக்கு மீன்பிடிக்கச் சென்ற வீரப்பன்(60) உட்பட 4 பேர் சென்றனர். கடல் சுரப்பு அதிகமாக இருந்த காரணத்தால் படகு கவிழ்ந்தது. நான்குபேரும் கடலுக்குள் மூழ்கினார்கள். இதில் வீரப்பன் மட்டும் மூழ்க மற்ற 3 பேரும் தப்பி கரை வந்தனர். மற்ற மீனவர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து படகுகளில் சென்று தேடியபோது வீரப்பன் இறந்தது தெரியவந்தது.

இதனை கண்டிக்கும் வகையில் சின்னமுதலியார் சாவடி சேர்ந்த மீனவர்கள் கிழக்கு கடற்கரை சாலையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். படகு கவிழ்ந்து விபத்தில் இறந்த வீரப்பனின் உடலை வைத்து அவர்கள் சாலையில் அரை மணிநேரம் மறியலில் ஈடுபட்டனர்.

போராட்டம் நடைபெற்ற இடத்திற்கு காவல்துறையினர் மற்றும் மீன்வள அதிகாரிகள் விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினார்கள். விரைவில் தூண்டில் வளைவு அமைக்க அரசு நடவடிக்கை எடுக்கும் என உறுதியளித்ததை தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது.

Also read... மதுரையில் சிசுக்கொலைகளை தடுக்க சிறப்புக்குழு அமைப்பு!

சின்ன முதலியார் சாவடி தூண்டில் முள்வளைவு அமைக்காததால் அடிக்கடி படகு கவிழ்ந்து விபத்து ஏற்படுகிறது. வாரத்திற்கு ஐந்து மீனவர்கள் காயமடைகிறது. உயிரிழப்பும் ஏற்படுகிறது. இதுதொடர்பாக சென்னை வரை போராட்டம் நடத்தியும் தங்களுக்கு விடிவு ஏற்படவில்லை என மீனவர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

Also read... அதிகரிக்கும் கொரோனா: பள்ளிகளில் ஆன்லைன் வகுப்பை நடைமுறைப்படுத்த வேண்டும் - ராமதாஸ்

சுனாமி ஏற்பட்ட 2004ஆம் ஆண்டு முதல் இந்த போராட்டம் நடைபெறுவதாக மீனவர்கள் தெரிவிக்கின்றனர். பக்கத்தில் உள்ள இரு மீனவ கிராமங்களில் தூண்டில் வளைவு அமைக்கப்பட்டதால் தங்களது பகுதியில் கடல் சுரப்பு அதிகமாக இருக்கிறது. இதனால் விபத்துகள் அதிகமாக நடப்பதாகவும் மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.
Published by:Vinothini Aandisamy
First published:

Tags: Fishermen

அடுத்த செய்தி