முகப்பு /செய்தி /தமிழ்நாடு / போலீஸ் ஸ்டேஷனில் நுழைந்து அதிமுக பெண் வேட்பாளரை தாக்கிய தி.மு.க-வினர்.. திண்டிவனத்தில் பரபரப்பு

போலீஸ் ஸ்டேஷனில் நுழைந்து அதிமுக பெண் வேட்பாளரை தாக்கிய தி.மு.க-வினர்.. திண்டிவனத்தில் பரபரப்பு

அதிமுக வேட்பாளர் மீது தாக்குதல்

அதிமுக வேட்பாளர் மீது தாக்குதல்

காவல் நிலையத்திற்குள்ளேயே தி.மு.க.வினர் நுழைந்து அ.தி.மு.க பெண் வேட்பாளர் அவரது குடும்பத்தினரை தாக்கிய சம்பவம் திண்டிவனம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

  • Last Updated :

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே திமுக வேட்பாளர் மீது புகார் அளிக்க சென்ற அதிமுக பெண் வேட்பாளரை காவல்நிலையம் புகுந்து தாக்கிய திமுகவினரால் பதட்டம் ஏற்பட்டது. 

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்குப்பதிவு நேற்று காலை 7 மணிக்கு தொடங்கிய நிலையில் விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் நகராட்சிக்கு உட்பட 13வது வார்டில் வால்டர்ஸ் கார்டன் மேல்நிலைப்பள்ளியில் அமைக்கப்பட்ட வாக்குப்பதிவு மையத்தில் நேற்று மதியம் தி.மு.க வேட்பாளர் பாபு. அ.தி.மு.க சுதா இருவரும்  வாக்காளரிடம் வாக்கு சேகரித்துள்ளனர் அப்போது இரு தரப்புக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது தி.மு.க வேட்பாளர் பாபு, அ.தி.மு.க பெண் வேட்பாளர் சுதாவை எட்டி உதைத்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சுதாவின் கணவர் சரவணன் மற்றும் மகன்  அஷோக் இருவரும் பாபுவை தாக்கியுள்ளனர்.

Also Read: சென்னையில் படுமோசமான வாக்குப்பதிவு.. தருமபுரியில் அதிக வாக்குப்பதிவு

அப்போது அங்கு பாதுக்காப்பு பணியில் ஈடுபட்டிருந்த  காவல்துறையினர் தலையிட்டு இருவரையும் சமாதானம் செய்து அனுப்பி வைத்த நிலையில் அ.தி.மு.க வேட்பாளர் சுதா கணவர் சரணன், மகன் அஷோக், சத்யா ஆகியோருடன் ரோசனை காவல்நிலையத்திற்கு தி.மு.க வேட்பாளர் பாபு மீது புகார் அளிக்க சென்றுள்ளார்.  இதனை அறிந்த தி.மு.க வேட்பாளர் பாபுவின் தம்பி சுரேஷ் தலைமையில் ஐம்பதுக்கும் மேற்பட்டோர் காவல்நிலையத்திற்குள் சென்று சுதா அவரது கணவர், மகன் ஆகியோரை கடுமையாக தாக்கியுள்ளனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

Also Read: முகத்தை காட்ட சொன்ன அதிகாரி.. ஹிஜாப் அகற்ற மறுத்த பெண்.. திருப்பூர் வாக்குச்சாவடியில் பரபரப்பு!

உடனடியாக அங்கிருந்த காவலர்கள் அவர்களை தடுத்து தி.மு.க.வினரை வெளியேற்றினர். இதனை அறிந்த அ.தி.மு.க-வினர் நூற்றுக்கும் மேற்படோர் காவல்நிலையத்தின் முன்பு குவிந்ததால் பதட்டமான சூழல் நிலவியது. உடனடியாக நூற்றுக்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்புக்காக ரோசனை காவல்நிலையத்தில் குவிக்கப்பட்டனர். இதனை தொடர்ந்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீநாதா, டிஐஜி பாண்டியன் நேரில் விசாரனை மேற்கொண்டார்.

மேலும் அதிமுக முன்னாள் அமைச்சர் சிவி.சண்முகம் ரோசனை காவல்நிலையம் நேரில் சென்று அ.தி.மு.க வேட்பாளரை தாக்கியவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினார். தாக்குதல் தொடர்பாக தி.மு.க வேட்பாளர் பாபுவின் தம்பி சுரேஷ் மீது வழக்கு பதிவு செய்து விசாரனை மேற்கொண்டு வருகின்றனர். காவல்நிலையத்திற்குள்ளேயே தி.மு.கவினர் நுழைந்து அ.தி.மு.க பெண் வேட்பாளர் அவரது குடும்பத்தினரை தாக்கிய சம்பவம் திண்டிவனம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

top videos

    செய்தியாளர்: ஆ.குணாநிதி (விழுப்புரம்)

    First published:

    Tags: ADMK, Crime News, DMK, Local Body Election 2022, Police station