விழுப்புரம் அருகே முருகனின் வேலில் வைத்து படைத்த எலுமிச்சம்பழத்தை 15 ஆயிரம் ரூபாய்க்கு பக்தர்கள் ஏலம் எடுத்துள்ளனர்.
விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் அருகேயுள்ள ஒட்டனந்தல் கிராமத்தில் இரட்டைக்குன்றின் மீது ரத்தினவேல் முருகன் கோவில் உள்ளது. கருவறையில் வேல் மட்டுமே உள்ள இந்த கோவிலில் பங்குனி உத்திர திருவிழா கடந்த 10ஆம் தேதி கொடி ஏற்றத்துடன் தொடங்கியது.
விழாவின் இறுதிநாளான நேற்று முந்தினம் பங்கு உத்திர திருவிழா வெகுவிமர்சையாக நடைபெற்றது. பங்கு உத்திர திருவிழாவை முன்னிட்டு நடத்தப்படும் உற்சவ காலங்களில் தினமும் வேலில் சொருகப்படும் 9 நாள் எலுமிச்சம் பழங்களை இடும்பன்பூஜையில் வைத்து ஏலம்விடும் நிகழ்ச்சி நேற்று இரவு நடைபெற்றது.
இதையும் படிங்க - கொரோனா 4ம் அலை பரவ வாய்ப்பு.. விரைந்து தடுப்பூசி செலுத்தி கொள்ளுங்கள்: ராதாகிருஷ்ணன் வலியுறுத்தல்
இந்த எலுமிச்சை பழத்தினை உண்டால் குழந்தை பாக்கியம் கிடைக்கும் எனவும், விரைவில் திருமணம் நடைபெறும் என நம்பப்படுகிறது. இதனால் ஏல நிகழ்ச்சியில் கலந்துக்கொள்ள பல மாவட்டங்களில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்டோர் வருகைப்புறிந்தனர். இடும்பன் பூஜைக்கு பிறகு கோயிலின் தலைமை பூசாரி ஆனி பதித்த காலனியின் நின்று ஏலத்தை தொடங்கினார்.
அதனை தொடர்ந்து பூசாரிகள் ஏலத்தை நடத்தினர். குழந்தை பாக்கியம் தரக்கூடிய முதல் எலுமிச்சை பழம் 13ஆயிரம் ரூபாய்க்கு ஏலம் போனது தொடர்ந்து திருமண பாக்கியம் தரக்கூடிய திருமங்கள எலுமிச்சை பழம் 15 ஆயிரம் ரூபாய்க்கு ஏலம் எடுக்கப்பட்டது. எலுமிச்சை பழத்தை ஏலம் எடுத்தவர்கள் உடலில் தண்ணீரை ஊற்றுக்கொண்டு பூசாரி முன்பு மண்டியிட்டு புடவையின் முந்தானையில் எலுமிச்சை பழத்தினை பெற்றுக்கொள்வார்கள் மேலும் அவர்களுக்கு இடும்பன் படையலில் இருந்து ஒரு உருண்டை சோறு வழங்கப்படும் அதனை கோயிலில் அமர்ந்து சாப்பிட வேண்டும்.
தொடர்ந்து ஒன்பது எலுமிச்சை பழங்கள் மொத்தம் 69ஆயிரத்து 100 ரூபாய்க்கு ஏலம் விடப்பட்டது. கடந்த ஆண்டு ஒரு லட்சத்தி 43ஆயிரம் ரூபாய்க்கு எலுமிச்சை பழங்கள் ஏலம் எடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. மேலும் கடந்த ஆண்டு இந்த கோயிக்கு வந்து எலுமிச்சை பழம் ஏலம் எடுத்து சாப்பிட்டு குழந்தை பாக்கியம் பெற்றவர்கள் சாட்சி செல்லும் நிகழ்வும் நடைபெற்றது. அதனை தொடர்ந்து இடும்பனுக்கு படைக்கப்பட்ட வருவாட்டு குழம்பு சோறு அனைவரும் பிரசாதமாக வழங்கப்படுகிறது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.