விழுப்புரம் மாவட்டம் கீழ்பெரும்பாக்கம், பஜனைகோயில் தெருவில் கடந்த 21 ஆண்டுகளாக
பெரியார் படிப்பகம் செயல்பட்டு வருகிறது. படிப்பகத்தின் வாயிலில் தந்தை பெரியாரின் மார்பளவு சிலை உள்ளது. பெரியாரின் சிலைக்கு இரும்பு கூண்டு அமைக்கப்பட்டு பூட்டப்பட்டிருந்தது.
இந்நிலையில், மர்ம நபர்கள் கடந்த மார்ச் 30ம் தேதி இரவு வேளையில் இரும்பு கூண்டின் பூட்டை உடைத்து, தந்தை பெரியார் சிலையின் முகத்தை சேதப்படுத்தியுள்ளனர். பின்னர் கதவை மூடிவிட்டு சென்றுள்ளனர். இந்நிலையில், நேற்று மதியம் அந்த வழியாக சென்ற பொது மக்கள் கூர்ந்து கவனித்த நிலையில், பெரியார் சிலையின் முகம் சேதப்படுத்தப்பட்டது தெரியவந்தது.
இதனை அறிந்த திமுக, மற்றும் திராவிடர் கழகத்தினர் சிலையை சேதப்படுத்தியவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் எனக் கூறி அப்பகுதியில் கண்டன முழக்கங்களை எழுப்பினர். சம்பவ இடத்தில் விழுப்புரம் மாவட்ட காவல் கண்கானிப்பாளர் ஸ்ரீநாதா நேரில் விசாரனை மேற்கொண்டார். இந்த சம்பவம் தொடர்பாக விழுப்புரம் நகர காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Must Read : கூட்டுறவு வங்கியில் அடகு வைத்த நகைகளை ஆங்காங்கே வெட்டி நூதன மோசடி - சேலத்தில் பரபரப்பு
மேலும், அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர். பெரியாரின் சிலை சேதப்படுத்தப்பட்டது அப்பகுதியில் பெறும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஜனவரி மாதம் விழுப்புரம் நகரின் மையப்பகுதியில் இருந்த முழு உருவ தந்தை பெரியாரின் சிலை வடமாநில லாரி ஓன்றினால் சேதப்படுத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
செய்தியாளர் -ஆ.குணாநிதி, விழுப்புரம். இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.