• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • பணம் பறிக்க தனியார் நிறுவனம் மீது தாக்குதல் நடத்தியதாக பாமக முன்னாள் எம்.எல்.ஏ மீது புகார் - இருவர் கைது

பணம் பறிக்க தனியார் நிறுவனம் மீது தாக்குதல் நடத்தியதாக பாமக முன்னாள் எம்.எல்.ஏ மீது புகார் - இருவர் கைது

மாதிரிப்படம்

மாதிரிப்படம்

விழுப்புரம் அருகே தனியார் நிறுவனம் மீது தாக்குதல் நடத்தியதாக செஞ்சி பாமக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மீது காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

  • Share this:
விழுப்புரம் மாவட்டம் செஞ்சியை அடுத்த நாட்டார்மங்கலத்தில் ஏ.கே. இன்பிரா என்கிற தனியார் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனம் கட்டுமான தொழில், ரியல் எஸ்டேட் மற்றும் சாலை பணிகளுக்கான பொருட்களை சப்ளை செய்து வருகிறது. இந்நிலையில் இந்நிறுவனத்தில் ஒரிரு நாட்களுக்கு முன் 20-க்கு மேற்பட்ட நபர்கள் உள்ளே புகுந்து தாக்குதல் நடத்தினர்.  இதில் இரண்டு சொகுசு கார்கள், அலுவலக கண்ணாடிகள் மற்றும் அதில் இருந்த கணினி, சிசிடிவி, பிரிண்டர்கள் மற்றும் வாகனங்கள் சேதமடைந்தன.

இது தொடர்பாக நிறுவனத்தின் உரிமையாளர் ஏழுமலை செஞ்சி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதையடுத்து செஞ்சி காவல்துறையினர் சம்பவ இடத்திற்க்கு சென்று விசாரனை மேற்கொண்டனர். மேலும் புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் வந்தவாசி பகுதியை சேர்ந்த பாபு மற்றும் நரசிம்மன் ஆகிய இருவரை கைது செய்த நிலையில் இந்த சம்பவத்தில் தொடர்புடைய மற்றவர்களையும் தேடிவருகின்றனர்.

இதுகுறித்து பாதிக்கப்பட்ட தனியார் நிறுவனத்தை சேர்ந்த சேர்மனும் பாமக பிரமுகருமன ஏழுமலை கூறும்போது, சாலை போடும் பணிக்காக ஏ.கே. இன்பிரா நிறுவனத்தில் பாமக முன்னாள் எம்எல்ஏ கணேஷ்குமார் பணம் கேட்டு மிரட்டுவதாகவும் பணம் தராததால், கணேஷ்குமார் தூண்டுதலின் பேரில் 20-க்கும் மேற்பட்ட குண்டர்கள் அலுவலகத்தில் புகுந்து தாக்குதல் நடத்தியதில் அலுவலகம் சூறையாடப்பட்டது என்றும் குற்றம் சாட்டுகின்றனர்.

சினிமா பானியில் பட்டபகலில் தனியார் நிறுவனத்தில் புகுந்து தாக்குதல் நடந்த சம்பவம் அப்பகுதியில் பெரும்பரப்பரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vijay R
First published: