Home /News /tamil-nadu /

விழுப்புரம் அருகே காரில் ரூ.38.75 லட்சம் பணம் பறிமுதல் - துணை ஆட்சியர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு

விழுப்புரம் அருகே காரில் ரூ.38.75 லட்சம் பணம் பறிமுதல் - துணை ஆட்சியர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு

துணை ஆட்சியர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு

துணை ஆட்சியர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு

திருச்சி மாவட்ட ஆதிதிராவிட நலத்துறை அலுவலராக பணியாற்றி வரும்  துணை ஆட்சியர் சரவணக்குமார், தனது காரில் பல லட்சம் ரூபாய் பணத்துடன் சென்னை நோக்கி சென்று கொண்டிருப்பதாக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

  • News18
  • Last Updated :
    விழுப்புரம் அருகே காரில் ரூ.38.75 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்ட விவகாரத்தில் துணை ஆட்சியர் உட்பட 4 பேர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். 

    திருச்சி மாவட்ட ஆதிதிராவிட நலத்துறை அலுவலராக பணியாற்றி வரும்  துணை ஆட்சியர் சரவணக்குமார், தனது காரில் பல லட்சம் ரூபாய் பணத்துடன் சென்னை நோக்கி சென்று கொண்டிருப்பதாக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இது குறித்து விழுப்புரம் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, உரிய நடவடிக்கை எடுக்க சென்னை தலைமையிடத்து லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் உத்தரவிட்டனர்.

    இந்நிலையில் கடந்த 30ஆம் தேதி  விழுப்புரம் மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை கூடுதல் கண்காணிப்பாளர் தேவநாதன் தலைமையிலான போலீசார், விழுப்புரம் அருகே உள்ள கெடிலம் தேசிய நெடுஞ்சாலையில், திருச்சி மாவட்ட ஆதிதிராவிட நலத்துறை அலுவலரான துணை ஆட்சியர் சரவணக்குமார் சென்ற காரை வழிமறித்து நிறுத்தி சோதனை நடத்தினர்.

    அப்போது காரில் இருந்த பைகளில் கட்டுக் கட்டாக பணம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து காரில் இருந்த பணத்தை பறிமுதல் செய்து காரில் வந்த திருச்சி மாவட்ட ஆதிதிராவிட நலத்துறை அதிகாரி, உதவியாளர் மணி, கார் ஓட்டுநர் ஆகியோரை விழுப்புரத்தில் மாவட்ட மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு அழைத்து சென்று தீவிர விசாரணை நடத்தினர்.

    அப்போது பணம் எண்ணும் இயந்திரம் கொண்டு வரப்பட்டு பணம் என்னப்பட்டது. அதில் ரூ.38.75 லட்சம் பணம் இருப்பது தெரியவந்தது. இது தொடர்பாக துணை ஆட்சியர் சரவணக்குமாரிடம் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தினர். இதில் திருச்சியில் ஆதிதிராவிடர் நலத்துறையின் கீழ் உள்ள விடுதிகளில் சமையல் பணியாளர்களை நியமிக்க லஞ்சப்பணத்தை வசூல் செய்துவிட்டு, பணத்தை சென்னையில் உள்ள உயரதிகாரிகளுக்கு கொடுப்பதற்காக காரில் பணத்துடன் துணை ஆட்சியர் சரவணக்குமார் கொண்டு சென்றதாக தகவல் வெளியாகியது.

    Also read... பாஜக கல்யாணராமன் மீதான குண்டாஸ் ரத்து - சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

    இந்நிலையில் இன்று திருச்சி மாவட்ட ஆதிதிராவிடர் நலத்துறை துணை ஆட்சியர்  சரவணகுமார், ஆதிதிராவிடர் நல இயக்குரக உதவி செயற்பொறியாளர் கலைமோகன், திருச்சி விடுதி காப்பாளார் செந்தில், உதவியாளர் மணி ஆகிய நான்கு பேர் மீது விழுப்புரம் லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    -செய்தியாளர்: குணாநிதி.
    Published by:Vinothini Aandisamy
    First published:

    Tags: Crime News, Villupuram

    அடுத்த செய்தி