விழுப்புரம் மாவட்டம் கோலியனூரை அடுத்த கண்டம்பாக்கம் கிராமத்தை சார்ந்த விவசாயி ஞானசேகரன். இவர், பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டத்தின் கீழ், வீடு கட்டுவதற்கான ஆணையை கடந்த 8.12.2022 ஆம் தேதி உயர் கல்வி துறை அமைச்சர் பொன்முடி கையால் பெற்று வீடு கட்டி வந்துள்ளார்.
வீடு முழுவதுவமாக கட்டப்பட்ட நிலையில், கோலியனூர் வட்டார வளர்ச்சி அலுவலர் நடராஜன் மற்றும் ஒன்றிய பணி மேற்பாளையர் குப்புசாமி ஆகியோர் வீடு கட்டுவதற்காக லஞ்சமாக 30 ஆயிரம் பெற்று கொண்டு மேலும் பத்தாயிரம் வழங்கினால் தான் நிதி ஒதுக்கீடு செய்து பணம் வழங்குவேன் என விவசாயிடம் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
இதனால் பாதிக்காப்பட்ட விவசாயி இன்று விழுப்புரம் ஆட்சியர் அலுவலகம் முன்பு, வீடு கட்டுவதற்கான நிதியை ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்றும், லஞ்சம் கேட்கும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரி, தனது உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி கொண்டு தற்கொலைக்கு முயன்றார்.
Must Read : பிறந்த நேரம் சரியில்லை.. 4 மாத குழந்தையை கொன்ற கொடூர தாய்.. பழனியில் அதிர்ச்சி
இதனையடுத்து, அங்கே பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் தற்கொலைக்கு முயன்ற விவசாயி ஞானசேகரன் மீது நீரை ஊற்றி அழைத்து சென்றனர், பின்னர் அவரிடம் விசாரணை மேற்கொண்டனர்.
செய்தியாளர் - ஆ.குணாநிதி, விழுப்புரம். இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.