Home /News /tamil-nadu /

தமிழகத்தில் செய்யப்படும் கொரோனா பரிசோதனைகளில் 85 சதவீதம் பேருக்கு ஒமைக்ரான் - ராதாகிருஷ்ணன் தகவல்

தமிழகத்தில் செய்யப்படும் கொரோனா பரிசோதனைகளில் 85 சதவீதம் பேருக்கு ஒமைக்ரான் - ராதாகிருஷ்ணன் தகவல்

சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்

சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்

Omicron : ஒமைக்ரான் தொற்றை அலட்சியம் செய்யாமல் உடனடியாக சோதனை செய்துக்கொள்ள வேண்டும் என மருத்துவத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

    தமிழகத்தில் செய்யப்படும் கொரோனா பரிசோதனைகளில் 85 சதவீதம் பேருக்கு ஒமைக்ரான் வகை கொரோனா தொற்று உறுதி செய்யப்படுகிறது என மருத்துவத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். 

    விழுப்புரம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் மருத்துவத்துறை செயலாளர் ராதாகிஷ்ணன் ஆய்வு மேற்கொண்டார். கொரோனா பரிசோதனை மையத்திற்கு சென்ற ராதாகிருஷ்ணன் அங்குள்ள பணியாளர்களிடம் ஆய்வு முடிவுகள் குறித்து கேட்டறிந்தார். தொடர்ந்து பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்தும் பணியினை பார்வையிட்டு முன்கள பணியாளர்கள் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்துவதை உறுதிப்படுத்த சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். அப்போது விழுப்புரம் மாவட்ட காவல் கண்கானிப்பாளர் ஸ்ரீநாதா பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்திக்கொண்டார்.

    ஆய்வுக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மருத்துவத்துறை செயலாளர் ராதாகிஷ்ணன், “உலக அளவில் நாள் இன்றுக்கு 30 லட்சம் பேருக்கும், இந்திய அளவில் 3லட்சம் பேருக்கும், தமிழகத்தில் 30 ஆயிரம் என்ற அளவில் தொற்று பதிவாகி வருகிறது. தமிழகத்தில் இறப்பு விகிதத்தை குறைக்க போர் கால அடிப்படையில் செயல்பட்டு வருகிறோம், தற்போது மருத்துவமனைகளில்  12,653 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.இது வெறும் 9 சதவீதம் ஆகும்.

    இரண்டு லட்சம் பேர் வீட்டு  கண்கானிப்பில் உள்ளனர். 4929 பேருக்கு ஆக்சிஜன் உதவியுடன் சிக்கிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா வைரசின் உருமாறிய வகைகள் தான் பல்வேறு பெயர்களில் அழைக்கப்படுகிறது. மூன்றாவது அலையை பொருத்தவரை பெரிய நகரங்களில் ஒமைக்ரான் அதிகரித்து வருகிறது. தற்போது மேற்கொள்ளப்படும் பரிசோதனைகளில் 85 சதவீதம் ஒமைக்ரான் தொற்று உறுதி செய்யப்படுகிறது. மேலும் 15 சதவீதம் டெல்டா வகை தொற்று உறுதி செய்யப்படுகிறது.

    ஒமைக்ரான் தொற்றை அலட்சியம் செய்யாமல் உடனடியாக சோதனை செய்துக்கொள்ள வேண்டும். தொற்று பாதித்தவர்கள் தங்களை தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும். கடந்த முறை 520 மெட்ரிக் டன் ஆக்சிஜன் தேவை இருந்தது. ஆனால் தற்போது மருத்துவம் மற்றும் மருத்துவம் சாரா பணிகளுக்கான ஆக்சிஜன் தேவை 117 மெட்ரிக் டன்னை தாண்டவில்லை.

    Also Read:  ஓமைக்ரான் கடைசி கோவிட் வேரியண்ட் இல்லை - WHO நிபுணர் கருத்து..

    மருத்துவ கல்லூரிகளில் 60 மெட்ரிக் டன்னை தாண்டவில்லை. இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிறு ஊரடங்கு காரணாமாக தொற்று பரவல் கட்டுக்குள் உள்ளது. முழு ஊரடங்கு குறித்து முதல்வர் அறிவிப்பார். தற்போதுள்ள ஊரடங்கு கட்டுப்பாடுகள் தொடரும் என தெரிவித்தார்.

    செய்தியாளர்: ஆ.குணாநிதி (விழுப்புரம்)     
    Published by:Ramprasath H
    First published:

    Tags: Corona, COVID-19 Test, Omicron, Omicron Symptoms, Radhakrishnan

    அடுத்த செய்தி