Home /News /tamil-nadu /

விழுப்புரம் அருகே கடையிலிருந்து 7 பழங்கால உலோக சிலைகள் மீட்பு

விழுப்புரம் அருகே கடையிலிருந்து 7 பழங்கால உலோக சிலைகள் மீட்பு

மீட்கப்பட்ட சிலைகளுள் சில.

மீட்கப்பட்ட சிலைகளுள் சில.

பறிமுதல் செய்யப்பட்ட 7 உலோக சிலைகளும் கும்பகோணம் நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
விழுப்புரம், பொம்மையார்பாளையம் பகுதியில் அமைந்துள்ள மெட்டல் கிராப்ட்ஸ் என்ற கடையில், பல கோவில்களில் இருந்து திருடப்பட்ட பழங்கால உலோக சிலைகள் வெளிநாட்டிற்கு விற்பனை செய்ய பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக தமிழக சிலை கடத்தல் தடுப்புப் பிரிவினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அதனடிப்படையில் நீதிமன்றத்தில் சோதனைக்கான அனுமதி பெற்று சிலைகடத்தல் தடுப்புப் பிரிவால் தனிப்படை அமைக்கப்பட்டு கடந்த 16 ஆம் தேதி பொம்மையார்பாளையத்தில் உள்ள மெட்டல் கிராப்ட்ஸ் கடை வளாகத்தில், சிலைகடத்தல் தடுப்புப் பிரிவு டி.ஜி.பி ஜெயந்த் முரளி உள்ளிட்ட அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

சோதனையில் இந்திய தொல்லியல் துறையால்  அளிக்கப்பட்ட அர்த்தநாரீஸ்வரர் சிலை தொடர்பான ஆவணங்களை தனிப்படையினர் கைப்பற்றிய நிலையில், கிடைத்த ஆவணம் மூலம் கடையில் பழங்கால சிலைகள் விற்பனை செய்யப்பட்டது உறுதி செய்யப்பட்டதால், அது தொடர்பாக கடை உரிமையாளரான ராமச்சந்திரன் என்பவரிடம் தனிப்படை போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.



அதனைத் தொடர்ந்து சோதனையை தனிப்படை போலீசார் தீவிரப்படுத்திய நிலையில், கடையினுள் ரகசிய இடத்தில் பதுக்கி வைத்திருந்த 7 பழங்கால உலோக சிலைகளை சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு தனிப்படை போலீசார் கண்டுபிடித்தனர்.

சென்னையின் ஒரு பகுதி கடலில் மூழ்க போகிறதா? காலநிலை மாற்ற திட்ட வரை அறிக்கை அதிர்ச்சி தகவல்

மேலும், அச்சிலைகளுக்கான முறையான ஆவணங்கள் கடை உரிமையாளர் ராமசந்திரனிடம் இல்லாததால் பெரிய அர்தநாரீஸ்வரர் சிலை, சிறிய அர்தநாரீஸ்வரர் சிலை, உடைந்த கையுடைய அர்தநாரீஸ்வரர் சிலை, சிவகாமி அம்மன் சிலை, கிருஷ்ணன் சிலை, புத்தர் சிலை, மயில் வாகனம் சிலை உள்ளிட்ட 7 பழங்கால உலோக சிலைகளையும் தனிப்படை போலீசார் கைப்பற்றினர்.

குழந்தைகளுக்கான காய்ச்சலில் தனிகவனம்.. மருத்துவமனைகளில் தீவிர கண்காணிப்பு - மா.சுப்பிரமணியன் தகவல்

இதனைத் தொடர்ந்து தனிப்படை போலீசார், சிலைகள் எந்த கோவிலில் இருந்து யாரால் திருடப்பட்டது என்பது உள்ளிட்ட விவரங்கள் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பறிமுதல் செய்யப்பட்ட 7 உலோக சிலைகளும் கும்பகோணம் நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
Published by:Musthak
First published:

Tags: Crime News, Villupuram

அடுத்த செய்தி