Home /News /tamil-nadu /

விழுப்புரம் : தள்ளுவண்டியில் இறந்து கிடந்த 5 வயது சிறுவன்... பட்டினியால் உயிரிழந்த சோகம்

விழுப்புரம் : தள்ளுவண்டியில் இறந்து கிடந்த 5 வயது சிறுவன்... பட்டினியால் உயிரிழந்த சோகம்

தள்ளுவண்டியில் இறந்து கிடந்த 5 வயது சிறுவன்

தள்ளுவண்டியில் இறந்து கிடந்த 5 வயது சிறுவன்

விழுப்புரத்தில் தள்ளுவண்டியில் இறந்து கிடந்த சிறுவன் பட்டினியால் உயிரிழந்ததாக உடற்கூறாய்வு மூலம் தெரியவந்துள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
விழுப்புரம் வடக்கு தெருவைச் சேர்ந்த சலவை தொழிலாளியான சிவக்குமாரின் தள்ளு வண்டியில் கடந்த 15 ஆம் தேதி போர்வையால் மூடிய நிலையில் ஐந்து வயது மதிக்கத்தக்க சிறுவன் உயிரிழந்து கிடந்துள்ளான். இதையடுத்து சிறுவனின் உடலை கைப்பற்றிய விழுப்புரம் மேற்கு காவல்துறையினர் பிரேத பரிசோதனைக்காக விழுப்புரம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

சிறுவன் உயிரிழந்தது தொடர்பாக நான்கு தனிப்படைகள் அமைத்து விசாரணை நடைபெற்று வருகிறது. சிறுவன் அங்கன்வாடி மைய சீருடை அணிந்திருந்ததால் மாவட்டத்தில் உள்ள ஆயிரத்து 300 அங்கன்வாடி மையங்களுக்கும் சிறுவனின் புகைப்படத்தை அனுப்பி விசாரணை மேற்கொள்ளப்பட்டது. ஆனால் சிறுவன் குறித்து எந்தவிதமான தகவலும் கிடைக்கவில்லை.

இந்நிலையில் சிறுவனின் பிரேத பரிசோதனை அறிக்கையில் சிறுவன் கொலை செய்யப்படவில்லை என்றும், சிறுவனின் குடலில் 2 நாட்களாக உணவு மற்றும் தண்ணீர் இல்லாததால் பசியால் உயிரிழந்திருக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சிறுவனை அடையாளம் காண தொடர்ந்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், இரண்டு தனிப்படைகள் ஆந்திரா மற்றும் கர்நாடகாவுக்கு விரைந்துள்ளன.

Also Read : ஃபாக்ஸ்கான் பெண் ஊழியர்கள் இறந்ததாக வதந்தி பரப்பிய சேலம் வளர்மதி கைது
Published by:Vijay R
First published:

Tags: Crime | குற்றச் செய்திகள், Villupuram

அடுத்த செய்தி