• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • விழுப்புரத்தில் திமுக கொடி கம்பம் நடும்போது மின்சாரம் தாக்கி 14 வயது சிறுவன் உயிரிழப்பு - போலீஸ் விசாரணை

விழுப்புரத்தில் திமுக கொடி கம்பம் நடும்போது மின்சாரம் தாக்கி 14 வயது சிறுவன் உயிரிழப்பு - போலீஸ் விசாரணை

விழுப்புரத்தில் திமுக கொடி கம்பம் நடும்போது மின்சாரம் தாக்கி 14 வயது சிறுவன் உயிரிழப்பு!

விழுப்புரத்தில் திமுக கொடி கம்பம் நடும்போது மின்சாரம் தாக்கி 14 வயது சிறுவன் உயிரிழப்பு!

விழுப்புரத்தில் திமுக கொடி கம்பம் நடும்போது மின்சாரம் தாக்கி 14வயது சிறுவன் உயிரிழந்த விவகாரம், குறித்து விழுப்புரம் மேற்கு காவல்நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

  • Share this:
    விழுப்புரம் ரஹீம் லே அவுட் பகுதியை சேர்ந்தவர் ஏகாம்பரம். இவருடைய மனைவி விஜயலட்சுமி, இவர்களின் கடைசி மகன் தினேஷ் வயது 14. ஒன்பதாம் வகுப்பு படித்து வரும் தினேஷ் தற்போது கொரோனா காரணமாக பள்ளிகள் மூடப்பட்டுள்ள நிலையில், தினேஷ் கட்சி நிகழ்ச்சிகள் உள்ளிட்டவற்றுக்கு கொடிக் கம்பங்களை நடும் வேலைக்கு சென்று வந்துள்ளார்.

    இந்நிலையில் கடந்த 20ம் தேதி விழுப்புரம் மாம்பழப்பட்டு சாலையில் உள்ள திருமண மண்டபத்தில் நடைபெறவிருந்த திமுக பிரமுகர் ஒருவரின் இல்ல திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்காக கட்சியினரை வரவேற்க திமுக கொடி கம்பத்தை நடும் பணியில் ஈடுபட்டுள்ளார்.

    Also read: திமுக கொடி நட்ட விழுப்புரம் சிறுவன் பலி - பொன்முடி மீது நடவடிக்கை எடுக்க ஜெயகுமார் வலியுறுத்தல்

    அப்போது, தினேஷ் மேலே இருந்த மின்சார கம்பியை பார்க்காமல் கம்பத்தை நட்டுள்ளார். இதனால், மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்ட தினேஷை அங்கிருந்தவர்கள் உடனடியாக மீட்டு விழுப்புரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

    அங்கு தினேஷை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து விழுப்புரம் மேற்கு காவல் நிலைய காவல் துறையினர் 174 மின்சாரம் தாக்கி உயிரிழத்தல் என்ற பிரிவில் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    கொடிக் கம்பம் நடும் பணியின் போது சிறுவன் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் விழுப்புரத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில், பொதுவாகவே அரசியல் கட்சியை சேர்ந்தவர்கள் கட்சி கூட்டங்கள், சுப நிகழ்ச்சிகளுக்கு பேனர் வைப்பது, கொடி பம்பங்களை நடுவது போன்ற பொது மக்களுக்கு இடையூறு செய்யும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    இதனால் பல உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளது. இதனை தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், உயிரிழந்த தினேஷ் குடும்பத்திற்கு இழப்பீடு வழங்குவதோடு, உயிரிழப்புக்கு காரணமான அனைவரின் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளனர்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Esakki Raja
    First published: