2வது திருமணத்திற்கு தயாரான விஏஓ... குழந்தையுடன் காதல் மனைவி தீக்குளிக்க முயற்சி

  • Share this:
விழுப்புரம் அருகே பெண்னை காதலித்து திருமணம் செய்து கொண்டு ரகசியமாக குடும்பம் நடத்திய கிராம நிர்வாக அலுவலர், இரண்டாவது திருமணம் செய்ய முயன்றதால் ஆட்சியர் அலுவலகத்தில் குழந்தையுடன் மனைவி தீக்குளிக்க முயன்றார். 

விழுப்புரம் அருகிலுள்ள பரசுரெட்டிப்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் கிராம நிர்வாக அலுவலர் ராஜா. இவரது மனைவி 27 வயதான பூவழகி. இவர் தனது மூன்று வயது குழந்தை யுவந்திகாவுடன் திங்கட்கிழமை காலை விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றார்.

அப்போது அங்கு பணியில் இருந்த காவலர்கள் பூவழகியை காப்பாற்றி தாலுகா காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் பூவழகியும், ராஜாவும் ஒரே கிராமத்தை சேர்ந்தவர்கள் என்பதும் இருவரும் நெருக்கமாக பழகியதால் பூவழகி கற்பமானதும் தெரியவந்தது


இது குறித்து அறிந்த பூவழகியின் பெற்றோர் ராஜாவின் வீட்டிற்கு சென்று திருமணம் செய்து வைக்க பேசியுள்ளனர். திருமணத்திற்கு சம்மதிக்க மறுத்து கருவை கலைக்குமாறு ராஜா கூறியுள்ளார். இதை அடுத்து விழுப்புரம் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் பூவழகி சார்பில் புகார் அளிக்கப்பட்டது.

இதை அடுத்து போலீசார் அறிவுரையின்படி, 2016ஆம் ஆண்டு பூவழகியை ராஜா பதிவு திருமணம் செய்து கொண்டார். ஆனால் தன்னுடன் அழைத்துச் செல்லாமல், பூவழகியை அவரது தாய் வீட்டிலேயே தங்க வைத்துள்ளார். குழந்தை பிறந்து மூன்று ஆண்டுகள் ஆன நிலையில் பூவழகி பலமுறை வலியுறுத்தியும் தற்போது வரை, அவருடன் ராஜா குடும்பம் நடத்த வரவில்லை எனக் கூறப்படுகிறது.

இது குறித்து மாவட்ட ஆட்சியர், மாவட்ட வருவாய் அலுவலர், வருவாய் கோட்டாட்சியர் உள்ளிடோருக்கு பல முறை பூவழகி புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனவும் கூறப்படுகிறது.இந்நிலையில், கடந்த 15 நாட்களுக்கு முன்பு பூவழகிக்கு விவாகரத்து நோட்டிஸ் அனுப்பியுள்ளார் ராஜா. மேலும் இரண்டாவதாக திருமணம் செய்ய ராஜா முயற்சித்ததாக தெரிகிறது.

இதனால் மனமுடைந்த பூவழகி குழந்தையுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு உடலில் மண்ணெண்ணை ஊற்றி தற்கொலைக்கு முயன்றார். தனது வாழ்க்கைய அழித்த நிலையில், மற்றொரு பெண்ணின் வாழ்க்கையையும் அழிக்க நினைப்பதாகவும், அதை தடுத்து தன்னுடன் கணவரை சேர்த்து வைக்க அந்த பெண் கோரிக்கை விடுத்துள்ளார்.


First published: November 20, 2019, 2:48 PM IST
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading