Home /News /tamil-nadu /

ஓடும் பேருந்தில் மாணவியிடம் அத்துமீறல்... விழுப்புரம் சம்பவத்தால் போக்குவரத்து துறை கவலை - கடும் எச்சரிக்கை

ஓடும் பேருந்தில் மாணவியிடம் அத்துமீறல்... விழுப்புரம் சம்பவத்தால் போக்குவரத்து துறை கவலை - கடும் எச்சரிக்கை

கோப்பு படம்

கோப்பு படம்

விழுப்புரம் மாவட்டத்தில் அரசு பேருந்தில் கல்லூரி மாணவியிடம் ஒட்டுநர் மற்றும் நடத்துனர் அத்துமீறிய சம்பவம் எதிரொலியாக போக்குவரத்துத்துறை கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

  • Last Updated :
    விழுப்புரம் அருகிலுள்ள கோனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் 20 வயதான கல்லூரி மாணவி. இவர் சென்னையில் உள்ள தனியார் கல்லூரியில் கணிதம் மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார். கல்லூரி மாணவி சொந்த ஊர் செல்வதற்காக விழுப்புரத்திலிருந்து கொத்தமங்கலம் செல்லும் அரசு பேருந்தில் ஏறியுள்ளார். பேருந்து பெரும்பாக்கம் என்ற இடத்திற்கு சென்ற போது பேருந்தில் இருந்த பயணிகள் அனைவரும் இறங்கிய நிலையில் மாணவி மட்டும் தனியாக பயணம் செய்துள்ளார்.

    இரவு 7. 15 மணி அளவில் பேருந்தில் மாணவி தனியாக இருப்பதை கவனித்த பேருந்து ஓட்டுநர் சிலம்பரசன் மாணவியின் அருகில் அமர்ந்து அவருக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். மேலும் கோனூர் கிராமத்தில் பேருந்தை நிறுத்தாமல் ஓட்டுநர் தொடர்ந்து இயக்கியுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவி, பேருந்தில் இருந்து குதித்துள்ளார். தகவலறிந்து வந்த கோனூர் கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் பேருந்தை மடக்கிப்பிடித்து ஓட்டுனர் மற்றும் நடத்துனரை, காணை காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

    காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணையில் பெண்ணுக்கு பாலியல் தொல்லை அளித்த உறுதி செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து பேருந்து நடத்துனர் சிலம்பரசன் ஓட்டுநர் அன்புச்செல்வன் இருவர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து இருவரையும் கைது செய்துள்ளனர்.

    Also Read : புழல் சிறை கைதி மர்ம மரணம் - கண்ணீர் வடிக்கும் மனைவி

    இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக அரசு பேருந்து ஒட்டுநர் மற்றும் நடத்துனர்களுக்கு போக்குவரத்து துறை சுற்றறிக்கை ஒன்றை அனுப்பி உள்ளது. அதில், விழுப்புரம் மாவட்த்தில் நடைபெற்ற  செயல் போக்குவரத்து கழகத்திற்கு மாபெரும் தலை குனிவையும், களங்கத்தையும் ஏற்படுத்தியதோடு, போக்குவரத்து கழக வரலாற்றில் இது ஒரு கருப்பு நிகழ்வு எனறும் தெரிவித்துள்ளது. மேலும் வரும் காலங்களில் பணியாளர்கள் இதுபோன்ற செயலில் ஈடுபடக் கூடாது எனவும் ஈடுபடும் பணியாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு நிரந்தர பணி நீக்கம் செய்யப்படுவார்கள் என எச்சரிக்கப்பட்டுள்ளது. இனி இதுபோன்ற சம்பவங்கள் நிகழாவண்ணம் பணியாளர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
    Published by:Vijay R
    First published:

    Tags: Crime | குற்றச் செய்திகள், Villupuram

    அடுத்த செய்தி