பட்டப்பகலில் பெட்ரோல் பங்க் மேலாளர் வெடிகுண்டு வீசி வெட்டிப் படுகொலை - விழுப்புரத்தில் பயங்கரம்

பட்டப்பகலில் பெட்ரோல் பங்க் மேலாளர் வெடிகுண்டு வீசி வெட்டிப் படுகொலை - விழுப்புரத்தில் பயங்கரம்
விழுப்புரம்
  • Share this:
மாமுல் பிரச்னையில் பட்டப்பகலில் பெட்ரோல் பங்க் மேலாளர் வெடிகுண்டி வீசியும், கத்தியால் வெட்டியும் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

விழுப்புரம் அருகிலுள்ள பனப்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் சீனிவாசன்(50). இவர் தற்போது ஆனந்தாநகரில் குடும்பத்துடன் வசித்துவருகிறார். விழுப்புரம்-புதுச்சேரி சாலை, கம்பன் நபரில் உள்ள நாகலட்சுமி பெட்ரோல் நிலையத்தில் மேலாளராக பணியாற்றி வருகிறார்.

எப்போதும் போல் பெட்ரோல் நிலையத்தில் உள்ள அலுவலகத்தில் வேலை செய்துக்கொண்டிருந்த போது காலை 11.30 மணியளவில் பெட்ரோல் போடுவது போல் கார் மற்றும் இருசக்கர வாகனத்தில் வந்த மர்மநபர்கள் நான்கு பேர் திடீர் என அலுவலகத்திற்குள் நுழைந்து சீனிவாசன் மீது நாட்டு வெடிகுண்டு வீடியும், கத்தியால் வெட்டியும் கொடூரமாக கொலை செய்துள்ளனர்.


பின்னர் நான்கு பேரும் கார் மற்று இருசக்கர வாகனத்தில் ஏறி தப்பி சென்றுள்ளனர். சத்தம் கேட்டு ஓடிவந்த பெட்ரோல் பங்க் ஊழியர்களை கொலையாளிகள் கத்தியை காட்டி மிரட்டி சென்றுள்ளனர். சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் சீனிவாசன் உடலை பிரேதபரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் சம்பவ இடத்தில் விழுப்புரம் மாவட்ட காவல்துறை கண்கானிப்பாளர் ஜெயக்குமார் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். பெட்டோல் நிலையத்தில் இருந்த கண்கானிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை கொண்டு காவல்துறையினர் குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.

காவல்துறையினரின் முதல்கட்ட விசாரணையில் பெட்ரோல் பங்கின் முன்னாள் உரிமையாளர் அசார் என்பவர் தற்போதுள்ள உரிமையாளர் பிரகாஷ் என்பவரிடம் 25 லட்சம் ரூபாய் பணம் கேட்டு மிரட்டி வந்தாகவும் அதனால் இந்தக் கொலை நடந்திருக்கலாம் எனவும் சந்தேகிக்கின்றனர். தற்போது சந்தேகத்தின் அடிப்படையில் மூன்று நபர்களை பிடித்து காவல்துறையின்ர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
First published: February 4, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்