கொடுங்கோல் ஆட்சியை கடந்து வந்த இந்தியா, மோடியையும் கடந்து வரும்- எம்.பி., ரவிக்குமார்!

, கல்வியை மாநிலப் பட்டியலுக்குக் கொண்டு வருவது, ஜிஎஸ்டியை ரத்து செய்வது, கல்விக் கடன்களை தள்ளுபடி செய்வாது, உள்ளிட்ட வாக்குறுதிகள் எல்லாம் பாஜக ஆட்சி அமைக்காமல் இருந்தால் எளிதாக நிறைவேற்றப்பட்டிருக்கும் என்றும் ரவிக்குமார் தெரிவித்துள்ளார்.

news18
Updated: May 27, 2019, 11:25 AM IST
கொடுங்கோல் ஆட்சியை கடந்து வந்த இந்தியா, மோடியையும் கடந்து வரும்- எம்.பி., ரவிக்குமார்!
எம்.பி., ரவிக்குமார்
news18
Updated: May 27, 2019, 11:25 AM IST
இந்தியா எத்தனையோ கொடுங்கோல் ஆட்சியாளர்களை கடந்திருக்கிறது, அதுபோல மோடியையும் கடந்து வரும் என்று விழுப்புரம் தொகுதி எம்.பி., ரவிக்குமார் தெரிவித்துள்ளார்.

நியூஸ் 18 தமிழ்நாடு தொலைக்காட்சிக்கு விறுவிறு பேட்டியளித்த விழுப்புரம் நாடாளுமன்றத் தொகுதி எம்.பி., ரவிக்குமார் பேசுகையில், ‘‘இந்தத் தேர்தலில் தமிழ்நாடும் கேரளாவும் மற்ற மாநிலங்களுடன் வேறுபட்ட ஒரு தீர்ப்பை வழங்கி இருக்கின்றன. இதனால் எங்களுக்கு மிகப்பெரிய கடமை இருப்பதாக கருதுகிறோம்.

தொகுதிக்காக பாடுபடுவது என்பது ஒருபுறம் இந்தியாவின் மதச்சார்பின்மையை காப்பாற்ற வேண்டும் என்பது மறுபுறம் உள்ளது, மக்கள் எங்கள் தோளில் மிகப்பெரிய கடமையை சுமத்தியிருக்கிறார்கள். அதை உணர்ந்து செயல்படுவோம்.

அண்ணா முதல்முறையாக நாடாளுமன்றத்திற்கு செல்லும் போது எப்படி தமிழ்நாடு என்று ஒரு மாநிலம் இருக்கிறது என்பது வெளியே வந்ததோ, அதுபோன்றதொரு நிலை தான் இந்தத் தேர்தலிலும் நிகழ்ந்துள்ளது. எனவே அண்ணாவின் வழியில் எங்களுடைய கடமையை நிறைவேற்றுவோம்.

கடந்த ஐந்து ஆண்டுகளில் மக்கள் வேண்டாம் என்று புறக்கணித்த திட்டங்களையெல்லாம் பாஜக அரசு கொண்டு வந்தது. தற்பொழுது இந்தத் தேர்தல் நேரத்தில் கூட புதுச்சேரி, விழுப்புரம், பகுதிகளில் ஹைட்ரோகார்பன் எடுப்பதற்காக வேதாந்தா நிறுவனத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த முறை தமிழகத்தின் மீது பாரதிய ஜனதாவிற்கு மிகக் கடுமையான கோபம் இருக்கும். அதிலிருந்து தமிழகத்தின் உரிமையை காப்பதற்கு நாங்கள் போராடுவோம்.

கூட்டாட்சி தத்துவம் தொடர்பாக பாரதிய ஜனதா பேசுவது வேறாக இருக்கிறது, செய்வது வேறாக இருக்கிறது. அவர்களுடைய கடந்த ஆட்சி காலத்தில் மாநில உரிமைகள் எல்லாம் பறிக்கப்பட்டன.

கல்வியை மாநிலப் பட்டியலுக்குக் கொண்டு வருவது, ஜிஎஸ்டியை ரத்து செய்வது, கல்விக் கடன்களை தள்ளுபடி செய்வது, உள்ளிட்ட வாக்குறுதிகள் எல்லாம் பாஜக ஆட்சி அமைக்காமல் இருந்தால் எளிதாக நிறைவேற்றப்பட்டிருக்கும்.
Loading...
இந்தியா எத்தனையோ கொடுங்கோல் ஆட்சியாளர்களை கடந்து வந்திருக்கிறது, அதுபோல மோடியையும் கடந்து வரும்’’ என்று கூறினார்.

Also see...

First published: May 27, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...