எய்ட்ஸ் விழிப்புணர்வுக்கு உலகம் முழுதும் பயங்கரமாக செலவிடப்பட்டது, அதே போல் இப்போது கொரோனா பற்றிய விழிப்புணர்வு தேவைப்படுவதை இதுபோன்ற சம்பவங்கள் அறிவுறுத்துகின்றன.
உண்மையில் கொரோனா குறித்த பயமா இது அல்லது கொரோனாவினால் ஏற்படும் மரணங்கள், ஆக்சிஜன் தட்டுப்பாடுகளினால் அல்லாடும் மனிதர்கள், கொரோனா வந்தால் மூச்சுத்திணறி இறந்து விடுவோம் என்ற பயம், உடலை சடங்கு சம்பிரதாயமின்றி எரித்து விடுவார்கள் என்ற அச்சம், இது போன்ற இனம்புரியாத பயங்கள் மக்களை இந்தக் காலக்கட்டத்தில் சூழ்ந்துள்ளன இதனால் மன தைரியமின்மையும், நம்முடைய அரசுகளின் போதாமைகளினால் ஏற்படும் பயமா இது என்றுதான் தெரியவில்லை.
எந்தக் காரணமாக இருந்தாலும் மக்களுக்கு தைரியமூட்டும் விழிப்புணர்வு தேவை என்பதை சமூக ஆர்வலர்கள் பலர் இந்தியா முழுதும் வலியுறுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், விழுப்புரம் மருதூர்மேடு பகுதியை சேர்ந்த சிவக்குமார் (வயது 50). விவசாயி. இவர் கடந்த சில நாட்களாக உடல் நலக்குறைவால் அவதிபட்டு வந்தார். எனவே தனக்கு கொரோனா அறிகுறிகள் இருக்கும் என கருதி அரசு ஆஸ்பத்திரியில் சளி சாம்பிளை சோதனைக்காகக் கொடுத்திருந்தார்.
எனவே பரிசோதனை முடிவில் எப்படியும் கொரோனா தொற்று இருக்கும் என முடிவு வரும். எனவே வாழ்வதைவிட தற்கொலை செய்வது என அவர் கருதினார். அதன்படி சிவக்குமார் அந்த பகுதியில் உள்ள கிணற்றில் குதித்து தற்கொலை செய்தார்.
இதனை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து விழுப்புரம் டவுன் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் போலீசார் விரைந்து உடலை மீட்டு விசாரணை நடத்தினர். விசாரணையில் சிவக்குமாருக்கு கொரோனா தொற்று இல்லை என்பது தெரியவந்தது.
இந்நிலையில் பெரும் முரணாக அவர் கொரோனாவுக்கு பயந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
Published by:Muthukumar
First published:
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.