பிறந்த நாளில் காதலியை சுட்டுகொன்று தற்கொலை செய்துகொண்ட காவலர்

Web Desk | news18
Updated: October 10, 2018, 9:22 AM IST
பிறந்த நாளில் காதலியை சுட்டுகொன்று தற்கொலை செய்துகொண்ட  காவலர்
சம்பவம் நடந்த இடத்தில் கார்திகேயன் - சரஸ்வதி
Web Desk | news18
Updated: October 10, 2018, 9:22 AM IST
விழுப்புரம் அருகே காவலர் ஒருவர் தன் காதலியை சுட்டு கொன்று விட்டு, தானும் சுட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரப்பரப்பை ஏற்படுத்துயுள்ளது. 

விழுப்புரம் மாவட்டம் அன்னியூர் பகுதியை சேர்ந்தவர் சரஸ்வதி. மருத்துவ மாணவியான இவருக்கு இன்று பிறந்தநாள். அவரது வீட்டில் நள்ளிரவு 12 மணியளவில் கேக் வெட்டி கொண்டாடினர்.

இந்நிலையில், சரஸ்வதி காதலனான வேலூர் தமிழ்நாடு சிறப்பு காவல் படைப்பிரிவில் பணியாற்றி வரும் கார்த்திகேயன் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் கலந்து கொண்டுள்ளார்.
அப்போது திடிரென சரஸ்வதிக்கும் கார்திகேயனுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. சுமார் 2 மணிவரை நீடித்த இந்த வாக்குவாதத்தில், யாரும் எதிர்பார்க்காத சூழலில் தனது கையில் வைத்திருந்த துப்பாக்கியை  எடுத்து சரஸ்வதியை சுட்டுக்கொலை செய்தார் கார்த்திகேயன். தொடர்ந்து தானும் சுட்டுகொண்டு இறந்துவிட்டார்.

இது குறித்து போலீஸ் விசாரித்து வருகிறது.
First published: October 10, 2018
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...