• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • பெற்றோர் விழிப்புடன் இருக்க வேண்டுமென ரவிக்குமார் எம்.பி வலியுறுத்தல்...!

பெற்றோர் விழிப்புடன் இருக்க வேண்டுமென ரவிக்குமார் எம்.பி வலியுறுத்தல்...!

ரவிக்குமார், பொதுச் செயலாளர், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி.

ரவிக்குமார், பொதுச் செயலாளர், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி.

கிராமங்களில் தின்பண்டங்களை எடுத்துச் சென்று விற்போர் நாள்பட்ட பண்டங்களை விற்பது சட்டப்படி குற்றமாகும்."

  • Share this:
    விழுப்புரத்திலுள்ள அரசூர் கிராமத்தில் தின்பண்டங்களை வாங்கிச் சாப்பிட்ட குழந்தைகள் உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இது தொடர்பாக விழுப்புரம் எம்.பி ரவிக்குமார் தெரிவித்திருப்பதாவது, “விழுப்புரம் மாவட்டம் பொய்கை அரசூர் கிராமத்தில் நேற்று தெருவில் விற்பனை செய்யப்பட்ட பேக்கரி பண்டங்களை வாங்கிச் சாப்பிட்ட சிறுவர்கள் 17 பேர் வாந்தி, மயக்கம், வயிற்றுப்போக்கு ஏற்பட்டு உடல்நிலை பாதிக்கப்பட்டதால், அதிகாலை முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரியில் அவசர சிகிச்சை பிரிவில் சேர்த்துள்ளனர். அவர்களது உடல்நிலை குறித்து மருத்துவக் கல்லூரி முதல்வரிடம் விசாரித்தேன். இருவருக்கு மட்டும் வாந்தி இருப்பதாகவும் அவர்களுக்கு டிரிப்ஸ் போடப்பட்டிருப்பதாகவும் மற்ற குழந்தைகள் நலமாக இருப்பதாகவும் தெரிவித்தார்.

    கிராமங்களில் தின்பண்டங்களை எடுத்துச் சென்று விற்போர் நாள்பட்ட பண்டங்களை விற்பது சட்டப்படி குற்றமாகும். இதை அவர்கள் உணரவேண்டும். பெற்றோரும் விழிப்புடன் இருந்து இத்தகைய பண்டங்களை பிள்ளைகளுக்கு வாங்கித் தருவதைத் தவிர்க்கவேண்டும்” என அவர் கூறியுள்ளார்.






    சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.




    Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, Helo, WhatsApp, Telegram, TikTok, YouTube




    Also see:

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Rizwan
    First published: