திருமண பத்திரிகை ஒன்றில் மாணிக்கம் தாகூர் எம்.பி. என அச்சடிக்கப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
மக்களவை தேர்தலில் விருதுநகர் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் இவர் போட்டியிட்டார். இந்நிலையில், தி.மு.க நகரச் செயலராக உள்ள ரமேஷ்குமாரின் மகள் திருமணம், வருகின்ற ஜூன் 9-ல் நடைபெறவுள்ளது.
இதற்காக அச்சடிக்கப்பட்டுள்ள பத்திரிகையில், முன்னிலை வகிப்பவர் என்ற இடத்தில் மாணிக்கம் தாகூர் பெயருடன் எம்.பி. என குறிப்பிடப்பட்டுள்ளது. தேர்தல் முடிவு வருகின்ற 23-ம் தேதி வெளியாகவுள்ள நிலையில், இவர் வெற்றி பெற்றுவிடுவார் என்ற நம்பிக்கையில் எம்.பி. என பத்திரிகையில் போடப்பட்டுள்ளது.
இதே போல அண்மையில், கோவிலில் வைக்கப்பட்ட கல்வெட்டில் துணை முதலைமைச்சர் ஓபிஎஸ்-ன் மகன் ரவீந்திரநாத் பெயருடன் தேனி நாடாளுமன்ற உறுப்பினர் என பொறிக்கப்பட்டிருந்தது. இந்த சர்ச்சை தமிழகம் முழுவதும் பெரும் சர்ச்சைஅயை ஏற்படுத்தியது. இது ஓய்வதற்குள் தற்போது மாணிக்கம் தாகூர் சிக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Also see... EXCLUSIVE கோவில் கல்வெட்டில் எம்.பி. ஆனார் ஓபிஎஸ் மகன்
Also see...
தேர்தல் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க. அரசியல் செய்திகள், தேர்தல் பிரசார வீடியோக்கள், சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Lok Sabha Election 2019, Tamil Nadu Lok Sabha Elections 2019, Villupuram