Home /News /tamil-nadu /

திமுக கொடி நட்ட விழுப்புரம் சிறுவன் பலி - பொன்முடி மீது நடவடிக்கை எடுக்க ஜெயகுமார் வலியுறுத்தல்

திமுக கொடி நட்ட விழுப்புரம் சிறுவன் பலி - பொன்முடி மீது நடவடிக்கை எடுக்க ஜெயகுமார் வலியுறுத்தல்

விழுப்புரத்தில் சிறுவன் உயிரிழந்த விவகாரத்தில் உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் வலியுறுத்தி உள்ளார்.

விழுப்புரத்தில் பொன்குமார் என்பவரது இல்ல திருமணத்தில் உயர்கல்வி அமைச்சர் பொன்முடி பங்கேற்றார். பொன்முடியை வரவேற்க விழுப்புரம் நான்கு முனை சந்திப்பில் திமுக கொடிகள் நடப்பட்டு வந்துள்ளது. இந்த பணியில் ஏகாம்பரம் என்பவரது இளைய மகன் தினேஷ் (13) என்ற சிறுவனும் கொடி கம்பம் நடும் பணியில் ஈடுபட்டுள்ளார்.

Also rad : நீண்ட நாட்களுக்கு பிறகு குடும்பத்துடன் கடற்கரைக்கு வந்த பொதுமக்கள்

அப்போது சிறுவன் நட்ட கொடி கம்பம் மேலே சென்ற உயர் அழுத்த மின் கம்பியில் உரசியதில் சிறுவன் தூக்கி வீசப்பட்டான். இதையடுத்து சிறுவனை முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தான். அமைச்சரை வரவேற்க கொடி கம்பம் நடும் பணியில் ஈடுபட்ட சிறுவன் உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Also read : தமிழகத்தில் இருந்து 4 மாதங்களுக்கு பின் கர்நாடகா, ஆந்திராவிற்கு பேருந்து போக்குவரத்து தொடக்கம்

இந்நிலையில் சிறுவன் உயிரிழப்பிற்கு அமைச்சர் பொன்முடி பொறுப்பேற்க வேண்டுமென்றும் அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் வலியுறுத்தி உள்ளார். பட்டினபாக்கத்தில் செய்தியாளர்களை சந்தித்த ஜெயகுமார், கொடநாடு விவகாரத்தில் சட்டசபையில் விவாதிப்பது மரபு மீறிய செயல். நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் வழக்கு குறித்து விதி எண் 55-ல் சட்டமன்றத்தில் விவாதிப்பது மரபை மீறுவது என்றும் தெரிவித்தார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Published by:Vijay R
First published:

Tags: ADMK, DMK, Jayakumar

அடுத்த செய்தி