திமுக கொடி நட்ட விழுப்புரம் சிறுவன் பலி விவகாரம் : காண்ட்ராக்டர் கைது

மாதிரி படம்

பள்ளி விடுமுறை என்பதால் வேலைக்குப் போன இடத்தில் பரிதாபமாக சிறுவன் உயிரிழந்தான்.

 • Share this:
  விழுப்புரத்தில் திமுக கொடிக் கம்பம் நட்ட சிறுவன் மின்சாரம் தாக்கி பலியான சம்பவத்தில் ஒப்பந்ததாரர் வெங்கடேஷை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

  விழுப்புரத்தில் பொன்குமார் என்பவரது இல்ல திருமணத்தில் உயர்கல்வி அமைச்சர் பொன்முடி பங்கேற்றார். பொன்முடியை வரவேற்க விழுப்புரம் நான்கு முனை சந்திப்பில் திமுக கொடிகள் நடப்பட்டு வந்துள்ளது. இந்த பணியில் ஏகாம்பரம் என்பவரது இளைய மகன் தினேஷ் (13) என்ற சிறுவனும் கொடி கம்பம் நடும் பணியில் ஈடுபட்டுள்ளார்.

  அப்போது சிறுவன் நட்ட கொடி கம்பம் மேலே சென்ற உயர் அழுத்த மின் கம்பியில் உரசியதில் சிறுவன் தூக்கி வீசப்பட்டான். இதையடுத்து சிறுவனை முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தான். அமைச்சரை வரவேற்க கொடி கம்பம் நடும் பணியில் ஈடுபட்ட சிறுவன் உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

  பள்ளி விடுமுறை என்பதால் வேலைக்குப் போன இடத்தில் பரிதாபமாக சிறுவன் உயிரிழந்த நிலையில், கொடிக்கம்பங்கள் நடுவது, பேனர்கள் வைப்பது ஆகியவற்றை கைவிட வேண்டும் என கட்சியினருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்திருந்தார்.

  இந்நிலையில் சிறுவன் மரணம் தொடர்பாக நிகழ்ச்சியின் ஒப்பந்ததாரர் வெங்கடேஷை போலீசார் கைது செய்துள்ளனர். சந்தேக மரணம் என வழக்குப்பதிவு செய்யப்பட்டிருந்த நிலையில், விபத்து வழக்காக அது மாற்றப்பட்டுள்ளது.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
  Published by:Vijay R
  First published: