விழுப்புரத்தில் பசி கொடுமையால் 5 வயது சிறுவன், தள்ளுவண்டியில் இறந்து கிடந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பசியால் சிறுவர்கள் உயிரை விடும் நிலைக்கு தமிழகம் சென்றுவிட்டதா என சமூக ஆர்வலர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
விழுப்புரம் வடக்கு தெருவை சேர்ந்தவர் சலவை தொழிலாளி சிவக்குமார்(45. இவர் விழுப்புரம் - சென்னை நெடுஞ்சாலையில், தள்ளு வண்டியில் துணிகளுக்கு இஸ்திரி போட்டு வருகிறார்.
இந்நிலையில் கடந்த 15ஆம் தேதி தள்ளுவண்டியில் போர்வையால் மூடிய நிலையில் 5 வயது மதிக்கத்தக்க சிறுவன் உயிரிழந்து கிடந்துள்ளான். சிறுவனின் உடலை கைப்பற்றிய விழுப்புரம் மேற்கு காவல்துறையினர் பிரேத பரிசோதனைக்காக விழுப்புரம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
சிறுவன் உயிரிழந்தது தொடர்பாக 4 தனிப்படைகள் அமைத்து விசாரனை நடைபெற்று வருகிறது. சிறுவன் அங்கன்வாடி மைய சீருடை அனிந்திருந்தனால் மாவட்டத்தில் உள்ள 1300 அங்கன்வாடி மையத்திற்கும் சிறுவனின் புகைப்படத்தை அனுப்பி விசாரனை மேற்கொண்டனர்.
ஆனால் அடையாளம் காண முடியவில்லை. இந்நிலையில் சிறுவனின் பிரேத பரிசோதனை அறிக்கையில் சிறுவன் கொலை செய்யப்படவில்லை என்றும், சிறுவனின் குடலில் 2 நாட்களாக உணவு மற்றும் தண்ணீர் இல்லை; அதனால் பசியால் உயிரிழந்திருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க : திண்டுக்கல் சிறுமி மர்ம மரணம்.. 4-வது நாளாக தொடரும் விசாரணை - மலைக்கிராமத்தில் போலீஸ் குவிப்பு
தொடர்ந்து சிறுவனை அடையாளம் காணும் கோணத்தில் காவல்துறையினர் விசாரனை மேற்கொண்டு வருகின்றனர். சிறுவன் குறித்து விசாரிக்க இரண்டு தனிப்படைகள் ஆந்திராவுக்கும், கர்நாடாகாவுக்கும் சென்றுள்ளனர்.
இதையும் படிங்க : மாணவி தூக்கிட்டு தற்கொலை - பாலியல் வன்கொடுமைக்கு எதிராக கடிதம்
பசிக்கொடுமையால் 5 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் நெஞ்சை உருக்குவதாக அமைந்துள்ளது. எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
இதையும் படிங்க : கோவை சரவணம்பட்டியில் அழுகிய நிலையில் சடலமாக மீட்கப்பட்ட சிறுமி
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Villupuram