தரமற்ற அரிசி வழங்குவதாக பொதுமக்கள் புகார் - ரேசன் கடை முற்றுகை

தரமற்ற அரிசி வழங்குவதாக பொதுமக்கள் புகார் - ரேசன் கடை முற்றுகை
ரேசன் கடையை முற்றுகையிட்டு கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்
  • Share this:
சிவகங்கை மாவட்டம்  மானாமதுரை அருகே விளாக்குளம் கிராமத்தில் தரமான அரிசி வழங்க வலியுறுத்தி, ரேசன் கடையை பெண்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

இது தொடர்பாக போராட்டம் நடத்தியவர்கள் கூறுகையில், “கடந்த ஒரு வருடமாக கருப்பு கலரில் மஞ்சள் நிறத்திலும் துர்நாற்றம் வீசும் அரிசியை கொடுத்து வருகின்றனர். நாங்களும் பலமுறை அதிகாரிகளிடம் கூறியும் நடவடிக்கை எடுக்கவில்லை. தற்போது கொரோனா பிரச்சனை என்பதால் அரசு கொடுத்த 1000 ருபாய் வைத்து  வெளியில் சென்று அரிசியும் வாங்க முடியாது.

அப்படியே வாங்கினாலும் அந்த 1000 ரூபாயில் எத்தனை கிலோ வாங்க முடியும். ரேசன் கடையில் தரமான அரிசி கொடுப்பதில்லை. அதை ஆடு, மாடு, கோழிகள் கூட சாப்பிடுவதில்லை.  இதை எப்படி சாப்பிடுவது”  என்று தெரிவித்தனர்.


Also read... ரேஷன் கடைகளில் இலவச முகக்கவசம் வினியோகம் எப்போது...? அமைச்சர் காமராஜ் தகவல்

இந்த போராட்டத்தின்போது, இந்த பிரச்னையை அதிகாரிகள் கவனத்திற்கு கொண்டு சென்று உடனடியாக தரமான அரிசி வழங்க ஏற்பாடு செய்வதாக மானாமதுரை யூனியன் சேர்மன் லதா அண்ணாதுரை தெரிவித்தார்.
First published: July 27, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading