குருவிக்காக ஒரு மாதம் இருளில் நடமாடும் கிராம மக்களின் வளர்ச்சிக்கு திமுக ₹ 50 ஆயிரம் நிதியுதவி

கிராம மக்களுடன் திமுக எம்.எல்.ஏ

குருவிக்கூட்டை கலைக்கக் கூடாது என்பதால் ஒருமாதமாக தெருவிளக்குகள் இன்றி இருளில் நடமாடும் கிராம மக்களின் வளர்சிக்கு திமுக 50 ஆயிரம் நிதியுதவி அளித்துள்ளது

  • News18
  • Last Updated :
  • Share this:
சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் அருகே பொத்தகுடி கிராமத்தில் தெருவிளக்குகளின் மெயின் ஸ்விட்ச் அமைந்துள்ள பெட்டியில் குருவி ஒன்று முட்டையிட்டு குஞ்சு பொறிக்க உள்ள நிலையில், அதனை தொந்தரவு செய்யக் கூடாது எனக் கருதி, ஒரு மாதமாக அக்கிராமத்தில் தெருவிளக்குகள் ஆன் செய்யப்படவில்லை.

இந்த செய்தி ஊடகங்களில் வெளியாகி கிராம மக்களுக்கு பாராட்டுகளும், வாழ்த்துகளும் குவிகின்றன. பொத்தக்குடி கிராம மக்களின் மனிதாபிமான செயலை தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் பாராட்டி நேற்று ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்த நிலையில், அவரது உத்தரவின் பெயரில் இன்று திருப்பத்தூர் எம்.எல்.ஏ.வும் திமுக மாவட்ட செயலாளருமான பெரியகருப்பன் அக்கிராமத்த்திற்க்கு வருகை தந்து, கிராம மக்களின் பணிகளை பாராட்டினார்.

மேலும், கிராமத்தின் வளர்ச்சிக்காக அவரின் சொந்த நிதியிலிருந்து திமுக சார்பாக ரூ 50,001-ஐ வழங்கிட பெரியகருப்பனிடம் உத்தரவிட்டார். இந்த செயலுக்கு முன் உதாரணமாக இருந்த கிராமத்தைச் சேர்ந்த இளைஞர் கருப்பு ராஜா, அவரின் துணைவியார் சுகன்யா மற்றும் கிராமத்து மக்களயும் எம்.எல்.ஏ பாராட்டி சால்வை அணிவித்து கவுரவப்படுத்தினார்.

கிராம மக்களுடன் எம்.எல்.ஏ பெரிய கருப்பன்


முன்னதாக திமுக தலைவர் ஸ்டாலின் கருப்பு ராஜா மற்றும் அவரது மனைவி சுகன்யாவிடம் அலைபேசியில் பேசி தனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டார். கொரரோனா பேரிடர் முடிந்த பிறகு கிராமத்திற்கு வருவதாகவும் தெரிவித்துள்ளார். இருவரும் ஸ்டாலினுக்கு தங்களது நன்றியை தெரிவித்துக்கொண்டனர்.
படிக்க: முழு ஊரடங்கு நீட்டிப்பு - எவற்றுக்கெல்லாம் தடை தொடர்கிறது...?

படிக்க: கேரளாவைச் சேர்ந்த நர்ஸ் அமெரிக்காவில் படுகொலை - கணவன் வெறிச்செயல்


படிக்க: ’ஆண் குழந்தையுடன் ஆசீர்வதிக்கப்பட்டுள்ளோம்’ ஹர்திக் பாண்டியாவுக்கு குவியும் வாழ்த்துக்கள்
இந்நிகழ்ச்சியில், மாவட்ட துணைச் செயலாளர் சேங்கை மாறன் காளையார்கோவில் ஒன்றியச் செயலாளர் கென்னடி மற்றும் அனைத்து திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
Published by:Sankar A
First published: