Home /News /tamil-nadu /

போராடி உரிமையைப் பெற்ற அமிர்தம் - தேசியக் கொடியை ஏற்றினார்

போராடி உரிமையைப் பெற்ற அமிர்தம் - தேசியக் கொடியை ஏற்றினார்

தேசியக் கொடியை ஏற்றிய அமிர்தம்

தேசியக் கொடியை ஏற்றிய அமிர்தம்

திருவள்ளூர் மாவட்டம் ஆத்துப்பாக்கம் ஊராட்சியில் பெண் ஊராட்சி தலைவர் அமிர்தம், மாவட்ட ஆட்சியர் மற்றும் எஸ்.பி மத்தியில் இன்று காலை தேசியக் கொடியை ஏற்றினார்

  • News18
  • 1 minute read
  • Last Updated :
    திருவள்ளூர் மாவட்டம் ஆத்துப்பாக்கத்தில் சுதந்திர தின விழாவின் போது ஊராட்சி மன்ற தலைவர் அமிர்தத்தை தேசிய கொடி ஏற்றவிடாமல் ஊராட்சி மன்ற செயலாளர் சசிக்குமார் தடுத்துள்ளார்.

    அமிர்தம் பட்டியல் இனத்தை சேர்ந்தவர் என்பதால் அவரை கொடியேற்ற விடாமல் தடுத்ததாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இந்நிலையில், ஆவடியில் நிகழ்ச்சியில் ஒன்றில் பங்கேற்ற மாவட்ட ஆட்சியர் மகேஷ்வரியிடம் இந்த விவகாரம் குறித்து கேள்வியெழுப்பப்பட்டது.

    அப்போது, ஊராட்சி மன்ற தலைவரை தேசிய கொடியேற்றவிடாமல் தடுத்த சசிக்குமாரை பணியிடை நீக்கம் செய்துள்ளதாகவும், அவருக்கு உடந்தையாக செயல்பட்ட இருவர் மீது வழக்கு பதியப்பட்டிருப்பதாகவும் கூறினார்.





    இந்த நிலையில், இன்று காலை ஊராட்சி அலுவலகத்தில் அமிர்தம் தேசியக் கொடியை ஏற்றினார். இந்த நிகழ்ச்சியில் ஆட்சியர் மற்றும் மாவட்ட எஸ்.பி கலந்துகொண்டனர்
    Published by:Sankar
    First published:

    Tags: Thiruvallur

    அடுத்த செய்தி