• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • ஜல்லிக்கட்டு, மஞ்சுவிரட்டு பார்க்க வந்தவர்களுக்கு வயிறு நிறைய விருந்துச் சாப்பாடு போட்ட கிராம மக்கள்!

ஜல்லிக்கட்டு, மஞ்சுவிரட்டு பார்க்க வந்தவர்களுக்கு வயிறு நிறைய விருந்துச் சாப்பாடு போட்ட கிராம மக்கள்!

News18

News18

  • News18
  • Last Updated :
  • Share this:
ஜல்லிக்கட்டு, மஞ்சுவிரட்டு பார்க்க வந்த மக்களுக்கு ஒவ்வொரு வீடுகளிலும் வெத்தலை பாக்கு வைத்து வயிராக சாப்பாடு போட்டு கிராம மக்கள் மனம் குளிர்வித்த சம்பபம் நடந்துள்ளது.

சிவகங்கை மாவட்டம் கண்டுப்பட்டி கிராமத்தில் பொங்கல் விழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு, மஞ்சுவிரட்டு போட்டிகள் நடைபெற்றன. முன்னதாக ஊரில் இந்துகளும், கிறிஸ்தவர்களும் ஒன்றாக பொங்கல் வைத்தனர்.

குழந்தைகள் இல்லாதவர்கள் ஏற்கனவே நேர்ந்துகொண்டபடி, குழந்தைகள் கிடைத்தால் நேர்த்திக் கடனை நிறைவேற்ற குழந்தைகளை கரும்பில் தொட்டில் கட்டி நிறைவேற்றினார்கள்.

அதே கிராமத்தில் ஜல்லிக்கட்டு, மஞ்சுவிரட்டு போட்டிகளும் நடந்தன. அந்த போட்டியை பார்வையிட வந்த சுமார் 10 ஆயிரத்திற்க்கு மேற்பட்டவர்களுக்கு காலையில் இருந்து மாலை வரை ஒவ்வொரு வீட்டிலும் வெற்றிலை பாக்கு வைத்து கையை பிடித்து வரவேற்று வயிறு நிறைய சாப்பாடு போட்டு மனம் குளிர விருந்துவைத்தும் கிராம மக்கள் அசத்தியுள்ளனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Sankar
First published: