சிவகங்கை அருகே குருவிக்கூட்டைப் பாதுகாக்க ஒரு மாதத்திற்கு மேல் தெரு விளக்குகள் இன்றி வாழும் கிராமம்

ஒரு குருவிக்கூட்டைப் பாதுகாக்க 30 நாட்களுக்கு மேல் தெரு விளக்கு இல்லாமல் வாழும் கிராம மக்கள்

சிவகங்கையில் உள்ள கிராமத்தில் ஒரு குருவிக்கூடை காக்க தெரு விளக்கே இல்லாமல் ஒரு மாதத்துக்கும் மேலாக மக்கள் இருளில் வாழ்ந்து வருகின்றனர்.

  • Share this:
சிவகங்கை மாவட்டம் மறவமங்கலம் அருகே பொத்தகுடி கிராமத்தில் உள்ள மின்கம்பத்தில் வைக்கப்பட்டுள்ள தெருவிளக்கு இணைப்புப் பெட்டியில் குருவி ஒன்று கூடுகட்டி முட்டையிட்டதை இக்கிராம இளைஞர்கள் பார்த்து பாதுகாக்கத் தொடங்கினர். நாளடைவில் தெரு விளக்குகள் எரிய மொத்த கண்ரோல் ஸ்விட்ச் ஆன் செய்யக்கூட முடியாத நிலை ஏற்பட்டது.

எனினும் இதை கிராம மக்களுக்கு தகவல் தெரிவிக்கையில், அழிந்துவரும் குருவி இனத்தைக் காக்க ஊர் மக்களும் ஒத்துழைத்தனர். இதனால் கடந்த 30 நாட்களுக்கும் மேலாக தெரு விளக்குகள் எரியாமல் இருளில் வாழ்ந்துவருகிறார்கள் பொத்தகுடி கிராம மக்கள்.

சின்னஞ் சிறிய குருவிகள் கூடு கட்டினால் நல்ல சகுனம், நன்மை அதிகரிக்கும், அதிர்ஷ்டத்தை அளிக்கும் என்பன மக்களின் நம்பிக்கையாக உள்ளன. இப்போதைய நகர வாழ்க்கையில் சிட்டுக்குருவிகளைப் பார்ப்பதே அரிதாகி வருகிறது.

Also read: தமிழகம் முழுவதும் திமுக கருப்புக்கொடி போராட்டம்

சின்னஞ்சிறியப் பறவையான சிட்டுக்குருவிகளின் எண்ணிக்கை  குறைந்து வருகிறது. இது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வந்தாலும் மின் கதிர்கள் செல்போன் கோபுரங்களால் சிட்டுக்குருவி இனம் அழிந்து வருவதாகக் கூறப்படுகிறது. அந்தக் காலத்தில் வீட்டின் முற்றத்திலும், வாசல்களிலும் சுதந்திரமாக வந்து தானியங்களைக் கொத்தித்தின்ற பறவையான சிட்டுக்குருவி, சுற்றுச்சூழல் மாசுபட்டதன் விளைவாக தற்போது குருவி இனம் அழிவின் விளிம்பிற்குச் செல்கிறது.

நகரங்களில் மட்டுமல்ல, சில கிராமங்களிலும் பறவைகளைப் பார்ப்பது அரிதிலும் அரிதாகிவிட்டது. சிட்டுக்குருவியின் மொத்த வாழ்நாள் 13 ஆண்டுகள் என்கிறார்கள். அது பெரும்பாலும் வனப்பகுதிகளில் வாழ்வதை விட மனிதர்களுடன் நெருங்கி இருக்கவே விரும்பும். விளைநிலங்களில் தெளிக்கப்படும் ரசாயன மருந்து காரணமாக சிட்டு குருவிகளில் இறைதேடும் இடங்கள் சுருங்கிவிட்டன.

குருவிகள் முட்டை இடுவதற்காவே கூட்டைத் தேடுகின்றன. இப்படி தேடி வந்த குருவி இனத்தை இந்தக் கிராம மக்கள் மனிதேயத்தோடு பாதுகாத்து வருகிறார்கள்.
Published by:Rizwan
First published: