நாமக்கல் அருகே ₹ 30 லட்சம் செலவில் கருணாநிதிக்கு பகுத்தறிவாலயம் கட்டும் கிராம மக்கள்!

கருணாநிதி

தாழ்த்தப்பட்ட பிரிவினருக்கு வழங்கப்படும் 18% சதவீத இடஒதுக்கீட்டில் 3% அருந்ததியினர் சமூக மக்களுக்கு உள்இடஒதுக்கீடாக வழங்கப்பட்டது.

 • News18
 • Last Updated :
 • Share this:
  நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் கிராமத்தில் தி.மு.க தலைவர் கருணாநிதிக்கு 30 லட்ச ரூபாய் செலவில் பகுத்தறிவாலயம் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டப்படுள்ளது. 

  தமிழகத்தின் முன்னாள் முதல்வரும் தி.மு.கவின் தலைவருமான கருணாநிதி கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 7-ம் தேதி காலமானார். அவர் இறந்து ஒரு வருடம் கடந்துள்ள நிலையில், நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகிலுள்ள குச்சிக்காடு என்ற கிராமத்தில் கருணாநிதிக்கு பகுத்தறிவாலயம் கட்டுவதற்கு அந்த கிராம மக்கள் முடிவெடுத்துள்ளனர்.

  இதுகுறித்து தெரிவித்த கிராம மக்கள், ‘கருணாநிதியின் ஆட்சிக் காலத்தின்போது, தாழ்த்தப்பட்ட பிரிவினருக்கு வழங்கப்படும் 18% சதவீத இடஒதுக்கீட்டில் 3% அருந்ததியினர் சமூக மக்களுக்கு உள்இடஒதுக்கீடாக வழங்கப்பட்டது.

  அதற்கு நன்றி தெரிவிக்கும் வகையில் பகுத்தறிவாலயம் கட்டுவதற்கு முடிவெடுக்கப்பட்டது என்று தெரிவித்துள்ளனர். 30 லட்ச ரூபாய் செலவில் பகுத்தறிவாலயம் கட்டப்படவுள்ளது. அதற்கான அடிக்கல் நேற்று நாட்டுவிழா இன்று நடைபெற்றது. இந்த விழாவில் கட்சி பேதமின்றி கிராம மக்கள் அனைவரும் கலந்துகொண்டனர்.

  இந்த ஆலயத்தில் நூலகம், கருணாநிதியின் சிலை அமைக்கப்பட உள்ளது.

  Also see:

  Published by:Karthick S
  First published: