வடிவேலு பாணியில் குளத்தைக் காணவில்லை என்று புகார் கூறும் கிராம மக்கள்

வடிவேலு பாணியில் குளத்தைக் காணவில்லை என்று புகார் கூறும் கிராம மக்கள்
மாதிரிப் படம்
  • Share this:
கிணற்றை காணவில்லை என்ற வடிவேலுவின் நகைச்சுவை காட்சியைப் போல, திருவள்ளூர் மாவட்டத்தில் குளத்தை காணவில்லை என்று கிராமமக்கள் புகார் கூறியுள்ளனர்.

திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை பகுதியில், பேருந்து நிலையத்தையொட்டி அமைந்த தாமரைக் குளத்தை காணவில்லை என அப்பகுதி மக்கள் தேடி வருகின்றனர். ஊத்துக்கோட்டை என்ற பெயர் வருவதற்கு காரணமாக விளங்கிய நான்கு குளங்களும் மாயமாகிவிட்டதாக கூறும் கிராம மக்கள், குறிப்பாக தாமரைக்குளம் முற்றிலுமாக ஆக்கிரமிப்புகளுக்கு உள்ளாகி குடியிருப்புகளாக மாறிவிட்டதாக கூறுகின்றனர். தாமரைக்குளம் இருந்த இடம், தற்போது இருசக்கர வாகன நிறுத்துமிடமாக மாறிவிட்டதாக வேதனை தெரிவிக்கும் மக்கள், உடனடியாக குளத்தை மீட்டெடுக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

 
First published: July 25, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading