ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

நாங்க பண்ணிட்டோம்.. இனியாவது அரசு முன்வருமா...? குளத்தை தாங்களாகவே தூர்வாரிய பொதுமக்கள்

நாங்க பண்ணிட்டோம்.. இனியாவது அரசு முன்வருமா...? குளத்தை தாங்களாகவே தூர்வாரிய பொதுமக்கள்

சிவகாசி-பாறைப்பட்டி

சிவகாசி-பாறைப்பட்டி

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :

சிவகாசி அருகே உள்ள பாறைப்பட்டி கிராமத்தில் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக தூர்வாரப்படாமல் இருந்த குளத்தை பொதுமக்கள் தாங்களாகவே தூர்வாரி வருகின்றனர்.

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள பாறைப்பட்டி கிராமத்தில் மிகவும் பழமை வாய்ந்த குளம் ஒன்று உள்ளது.

இந்த குளம் அந்தப் பகுதி மக்களின் முக்கிய நிலத்தடி நீர் ஆதாரமாக விளங்குகிறது. மேலும் அந்தப்பகுதியில் உள்ள கண்ணன் கோவிலுக்கு இந்தக் குளத்தில் இருந்துதான் ஆண்டுதோறும் திருவிழாவிற்கு நீர் எடுத்து வந்துள்ளனர்.

இந்நிலையில், இந்த குளம் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக தூர்வாரப்படாமல் முட்புதர்கள் முளைத்தும் குப்பைகளாக  காட்சி அளித்துள்ளது.

இதுகுறித்து குளத்தை தூர்வாற  பலமுறை சிவகாசி நகராட்சி அலுவலகத்திலும்,  மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை .

மாவட்ட ஆட்சியர் தாங்களாகவே குளத்தை தூர்வாரி கொள்ளவும் என்று கூறியுள்ளார்.

இதனடிப்படையில், கிராம மக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து இந்த குளத்தை தூர்வார முடிவு செய்து ஜேசிபி இயந்திரத்தின் மூலமாக சுமார் 5 கிலோமீட்டர் தூரத்திற்கு இந்த குளத்திற்கு வரும் நீரோடை பாதைகள் வரை தூர்வாரி உள்ளனர்.

அரசாங்கம் செய்ய வேண்டிய ஒரு வேலையை கிராம மக்களை ஒன்று சேர்ந்து செய்துள்ளது மிகவும் பாராட்டுக்குரியது என்றும் இதை தாங்கள் முழு மனப்பூர்வமாக செய்து வருவதாகவும் அந்த கிராம மக்கள் கூறுகின்றனர்.

மேலும், தாங்கள் சொந்த பணத்தை செலவு செய்து தான் இந்த குளத்தை தூர்வாரி வருகிறோம் என்றும் குளம் தூர் வாரிய பிறகாவது அரசு எங்களுக்கு உதவிட வேண்டும் என்றும் அந்த பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Also Watch: அதிரடி சலுகைகளுடன் ஜியோ பைபர் அறிமுகம்

Published by:Anand Kumar
First published:

Tags: Sivakasi