கிராம ஊராட்சி செயலாளர் மீது நடவடிக்கை எடுப்பதற்கு உயர் அலுவலர் ஒருவருக்கு அதிகாரமளிப்பதற்கான சட்டத் திருத்த மசோதாவை ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் பெரியகருப்பன் பேரவையில் தாக்கல் செய்தார்.
கிராம ஊராட்சி செயலாளர் முழுநேர பணியாளராக ஊராட்சிக்கு உதவி புரியக்கூடிய நிர்வாக பணியாளராக இருக்கிறார். ஊரக வளர்ச்சி திட்டங்களுக்கும் ஊராட்சிக்கும் அடித்தளமாகவும் கிராம ஊராட்சி செயலாளர் இருக்கும் நிலையில், சொந்த கிராம ஊராட்சிகளில் பல ஆண்டுகளாக பணிபுரிந்து பல்வேறு அனுபவங்களை பெற்றவராகவும் அவர் இருக்கிறார்.
மேலும், கிராம ஊராட்சி செயலாளர் மாவட்ட நிர்வாகத்திற்கு அதிக பொறுப்புடையவராகவும் இருக்கிறார். இந்த சூழலில், கிராம ஊராட்சி செயலாளர் விதிமுறை மீறலில் ஈடுபட்டால், அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுப்பதற்கோ, துறை ரீதியான விசாரணை நடத்துவதற்கோ மற்றும் பணி மாறுதல் செய்வதற்கோ தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டத்தில் இடம் இல்லாமல் இருந்தது.
இதையும் படிங்க: மருத்துவத்துறையில் 4000 காலி பணியிடங்கள்.. விரைவில் நிரப்பப்படும்: தமிழக அரசு அறிவிப்பு
இதற்கு வழிவகை செய்யும் வகையில் சட்டத்திருத்த முன்வடிவை பேரவையில் இன்று அமைச்சர் பெரியகருப்பன் தாக்கல் செய்தார். இந்த திருத்தச்சட்டத்தின் படி விதிமுறை மீறும் கிராம நிர்வாக செயலாளர் மீது நடவடிக்கை எடுக்க கிராம ஊராட்சி செயலாளரின் படிநிலைக்கு மேல் உயர் அலுவலர் ஒருவருக்கு அதிகாரமளிப்பதற்கு சட்ட திருத்தத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.