முகப்பு /செய்தி /தமிழ்நாடு / காசோலை கூடாது; ஆன்லைன் மூலமே பணப்பரிவர்த்தனை - ஊராட்சி தலைவர்களுக்கு பல கட்டுப்பாடுகள்

காசோலை கூடாது; ஆன்லைன் மூலமே பணப்பரிவர்த்தனை - ஊராட்சி தலைவர்களுக்கு பல கட்டுப்பாடுகள்

News18

News18

  • Last Updated :

ஊராட்சி மன்ற தலைவர்கள் காசோலை மூலம் பணப்பரிவர்த்தனை செய்யக் கூடாது என்று கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

சமீபத்தில் நடந்து முடிந்த ஊரக உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற்ற ஊராட்சி தலைவர்கள் பதவியேற்றுக்கொண்டனர்.

9 மாவட்டங்கள் தவிர்த்து பிற மாவட்டங்களில் ஊராட்சி நிர்வாகத்திற்கு நியமிக்கப்பட்ட தனி அலுவலர்கள், தங்களது பொறுப்புகளை தலைவராக பொறுப்பேற்றவரிடம் ஒப்படைக்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக ஊராட்சி மன்ற தலைவர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மற்றும் மாவட்ட ஆட்சியர்களுக்கு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி இயக்குநர் எழுதிய கடிதத்தில் கூறப்பட்டு இருப்பதாவது, கிராம ஊராட்சியின் தனி அலுவலர், சம்பந்தப்பட்ட ஊராட்சியின் பொறுப்புகளை தேர்ந்தெடுக்கப்பட்ட கிராம ஊராட்சி தலைவரிடம் ஒப்படைக்க வேண்டும். ஊராட்சி மன்றத் தலைவர் பொறுப்பை பெற்றுக் கொண்டதற்கான அறிக்கையை தீர்மானப் பதிவேட்டில் பதிவு செய்து வட்டார வளர்ச்சி அலுவலருக்கு அளிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், ஊராட்சி மன்ற நிதி நிர்வாகம் பொது நிதி மேலாண்மை அமைப்பின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளதால், காசோலைகள் பயன்பாடு அவசியமற்றதாகி உள்ளது. எனவே எக்காரணத்தை கொண்டும் ஊராட்சி கணக்குகளின் கீழ் காசோலைகளை பயன்படுத்த கூடாது. எனினும், மின் கட்டணம் மற்றும் குடிநீர் கட்டணம் ஆகியவற்றை காசோலை மூலம் மின் கட்டணம் மற்றும் குடிநீர் கட்டணம் செலுத்தும் பொருட்டு, காசோலைகளை அனுமதிக்கலாம் என்று கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

மற்ற பரிவர்த்தனைகளை ஆன்லைன் முறையில் மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதற்கான பயிற்சியை அளிக்கவும் கடிதத்தில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

First published:

Tags: Local Body Election 2019