அரசின் நிதியை எதிர்பார்க்காமல் சொந்த பணம் ₹ 8 லட்சத்தில் தூய்மைப் பணிகளை தொடங்கிய ஊராட்சி தலைவர்!

அரசின் நிதியை எதிர்பார்க்காமல் சொந்த பணம் ₹ 8 லட்சத்தில் தூய்மைப் பணிகளை தொடங்கிய ஊராட்சி தலைவர்!
News18
  • News18
  • Last Updated: January 19, 2020, 7:05 AM IST
  • Share this:
கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனஹள்ளியில் ரூ.8 லட்சம் மதிப்பில் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றி வருகிறார் ஊராட்சி தலைவர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனஹள்ளியில் நடந்து முடிந்த ஊரக உள்ளாட்சி தேர்தலில் பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு போட்டியிட்டு 100 வாக்குகள் வித்தியாசத்தில் கலீல் என்பவர் வெற்றி பெற்றார். இவர் தேர்தலில் போட்டியிடும் போது தான் வெற்றி பெற்றால் வேப்பனஹள்ளி பஞ்சாயத்தை தூய்மையான முதன்மை பஞ்சாயத்தாக மாற்றுவேன் என வாக்குறுதி அளித்தார்.

இந்த நிலையில் அப்பகுதி மக்கள் வக்களித்து கலீலை பஞ்சாயத்து தலைவராக தேர்வு செய்தனர். இதனை அடுத்து அரசின் நிதியை எதிர்பாக்காத கலீல் தனது சொந்த நிதியில் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றும் பணியில் ஈடுபட்டு வருகிறார்.


அவர் வேப்பனஹள்ளி பஞ்சாயத்தில் பல ஆண்டுகளாக சுகாதாரம் இல்லாமல் சேர்த்து வைத்துள்ள குப்பைகளை அகற்ற சுமார் 3 லட்சம் நிதி ஒதுக்கியும், கழிவு நீர் கால்வாய்களை சுத்தம் செய்ய 1 லட்சம் நிதியும் ஒதுக்கி பணிகளை மேற்கொண்டு வருகிறார். மொத்தமாக 4 லட்சம் நிதி ஒதுக்கியதுடன் தானே நேரடியாக களம் கண்டு குப்பை டிராக்டரை ஓட்டி சென்று அங்குள்ள குப்பைகளை அகற்றி வருகிறார். மேலும் 4 லட்சம் நிதி ஒதுக்கி அங்குள்ள நீர் நிலை கால்வாய்களை தூர் வாரும் பணியையும் மேற்கொண்டு வருவதுடன் காய்கறி மார்கெட் அமைப்பதற்கு உண்டான பணிகளையும் மேற்கொண்டு வருகிறார்.

அரசு நிதி ஒதுக்குவதற்கு முன் மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் என்ற நோக்கில் சொந்த நிதியில் பணிகளை மேற்கொண்டு வரும் இவரது செயல் அப்பகுதி மக்களிடம் பெறும் வரவேற்பை பெற்றுள்ளது.
First published: January 19, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்