ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

’ஊருக்குள் மதப் பிரச்சாரங்களுக்கு அனுமதியில்லை’- நெல்லை கிராமத்தில் அறிவிப்பு பலகை

’ஊருக்குள் மதப் பிரச்சாரங்களுக்கு அனுமதியில்லை’- நெல்லை கிராமத்தில் அறிவிப்பு பலகை

பூலாங்குளம் கிராமம் (Image- Twitter/ Hindu Munnani)

பூலாங்குளம் கிராமம் (Image- Twitter/ Hindu Munnani)

இவ்விவகாரம் பெரிதாகி உள்ளதால் கிராமத்தினரையும் அறிவிப்புப் பலகையின் பின்னணிக் குறித்தும் காவல்துறையினர் விசாரணையைத் தொடங்கி உள்ளனர்.

  • News18
  • 1 minute read
  • Last Updated :

'ஊருக்குள்  மதப்பிரச்சாரங்களுக்கு அனுமதி இல்லை' என திருநெல்வேலியில் உள்ள ஒரு கிராமம் வித்தியாசமான அறிவிப்புப் பலகையை வைத்துள்ளது தற்போது சமூக வலைதளங்களில் விவாதப் பொருளாக உருவாகியுள்ளது.

திருநெல்வேலியில் உள்ள பூலாங்குளம் என்னும் கிராமத்தின் நுழைவு வாயிலிலே வரவேற்புப் பலகையுடன் ஒரு வித்தியாசமான அறிவிப்பும் இடம் பெற்றுள்ளது. இந்த அறிவிப்புதான் தற்போது நெட்டிசன்களை பல்வேறு குழுக்களாகப் பிரித்து விவாத மேடையில் ஏற்றியிருக்கிறது.

பூலாங்குளம் கிராமத்தின் வரவேற்புப் பலகையில் ’ஊருக்குள் மதப் பிரச்சாரங்கள் செய்ய அனுமதி இல்லை. மீறினால் நடவடிக்கை எடுக்கப்படும்’ எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இது ’இந்து முன்னணிக் கட்சியின் உழைப்பால்’ என இந்து முன்னணியின் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவு தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இந்து முன்னணியின் ட்விட்டர் பதிவில், “விழிப்படைந்த இந்து சமுதாயம்... இந்து முன்னணியின் 36 ஆண்டுகால அயராத உழைப்புக்கு கிடைத்த வெற்றி” எனக் கிராமத்தின் அறிவிப்புப் பலகையின் புகைப்படத்துடன் பதிவிடப்பட்டுள்ளது.

கிறிஸ்துவ மத பிரச்சாரங்களைத் தடுக்கவே இந்த அறிவிப்புப் பலகை வைக்கப்பட்டது என்று ஒரு சிலர் கூறுகின்றனர். ஆனால், இவ்விவகாரம் பெரிதாகி உள்ளதால் கிராமத்தினரையும் அறிவிப்புப் பலகையின் பின்னணிக் குறித்தும் காவல்துறையினர் விசாரணையைத் தொடங்கி உள்ளனர்.

மேலும் பார்க்க: திருட்டு சிலிண்டர்... வெல்டிங் மெசின்... பஞ்சாப் நேஷனல் வங்கிக் கொள்ளையில் புதிய தகவல்கள்

First published:

Tags: Hindu Munnani, Tirunelveli