விக்கிரவாண்டி, நாங்குநேரி இடைத்தேர்தல் - வேட்புமனு தாக்கல் இன்று தொடக்கம்

விக்கிரவாண்டி, நாங்குநேரி இடைத்தேர்தல் - வேட்புமனு தாக்கல் இன்று தொடக்கம்
திமுக- அதிமுக
  • News18
  • Last Updated: September 27, 2019, 9:18 AM IST
  • Share this:
விக்கிரவாண்டி, நாங்குநேரி இடைத்தேர்தல் வேட்புமனு தாக்கல் இன்று தொடங்குகிறது. அதிமுக சார்பில் போட்டியிட விரும்பியவர்களிடம் மாலையில் நேர்காணல் நடைபெறுகிறது.

தமிழகத்தில் காலியாக உள்ள நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளுக்கு வருகின்ற அக்டோபர் 21-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான வேட்பு மனுத் தாக்கல் இன்று காலை 10 மணிக்கு தொடங்குகிறது. 2 தொகுதிகளில் அதிமுக சார்பில் போட்டியிட விரும்புபவர்களிடம் சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் நேற்று விருப்ப மனு பெறப்பட்ட நிலையில், மீண்டும் இன்று காலை 10 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை விருப்ப மனுக்கள் பெறப்பட உள்ளன. அதன் பின், மூன்றரை மணி அளவில் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி, துணை ஒருங்கிணைப்பாளர்கள் முன்பு வேட்பாளர் நேர்காணல் நடைபெற உள்ளது.

மேலும் அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நாளை மாலை 6 மணிக்கு சென்னை ராயப்பேட்டை தலைமை அலுவலகத்தில் நடைபெறுகிறது. எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள், ஆட்சிமன்றக்குழு உறுப்பினர்கள், அமைப்புச்செயலாளர்கள் உள்ளிட்டோர் பங்கேற்கும் இந்த கூட்டத்தில் இடைத்தேர்தல் குறித்து ஆலோசிக்கப்பட உள்ளது. இதைத்தொடர்ந்து அதிமுகவின் வேட்பாளர் பெயர் அறிவிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.


இதனிடையே திமுக சார்பில் விக்கிரவாண்டியில் போட்டியிட விரும்புபவர்களுக்கு அண்ணா அறிவாலயத்தில் விருப்பமனு விநியோகம் நடைபெற்றது. பூர்த்தி செய்யப்பட்ட விருப்ப மனுக்களை இன்று காலை 10 மணி முதல் மாலை 6 மணிக்குள் அளிக்கலாம் என கூறப்பட்டுள்ளது. நாளை வேட்பாளர் நேர்காணல் நடைபெறுகிறது. இதேபோல் நாங்குநேரியில் போட்டியிட விருப்பம் உள்ளவர்களிடம் தமிழக காங்கிரஸ் கமிட்டி இன்று விருப்ப மனுக்களை பெறுகிறது.

Also watch

First published: September 23, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்